Begin typing your search above and press return to search.
திருநாவலூரில் இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது
திருநாவலூரில் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
HIGHLIGHTS

திருநாவலூர் காவல் நிலைய அரங்கம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய விக்னேஷ்.
கள்ளகுறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல் நிலைய அரங்கம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மேற்படி நபரிடம் போலீசார் விசாரித்ததில், தலைவாசல் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் விக்னேஷ் (22) என்பது தெரிய வந்தது. மேலும் விக்னேஷ் இருசக்கர வாகனங்களை திருடுபவர் என்று தெரிய வந்தது. அவரிடமிருந்து 8 இருசக்கர திருட்டு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து விக்னேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.