Begin typing your search above and press return to search.
உளுந்தூர்பேட்டையில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பணி ஆணை வழங்கல்
உளுந்தூர்பேட்டையில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிக்கு பணி ஆணையை எம்எல்ஏ வழங்கினார்.
HIGHLIGHTS

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிக்கு பணி ஆணையை வழங்கும் எம்எல்ஏ. ஏ.ஜே.மணிகண்ணன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதி திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம குடியிருப்பு திட்டத்தின் கீழ் இலவச வீடு கட்டுவதற்கான பணி ஆணையை எம்எல்ஏ., ஏ.ஜே.மணிகண்ணன் வழங்கினார். சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் மகன் வல்லபதாஸ் என்பவருக்கு பணி ஆணையை வழங்கப்பட்டது.
உடன் திருநாவலூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி இளங்கோவன், சேந்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் உமா சந்திரகாசன், திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வ கணேசன் மற்றும் கவுன்சிலர்கள் காமராஜ், சிவகுமார் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.