உளுந்தூர்பேட்டை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா

உளுந்தூர்பேட்டை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா
X

உளுந்தூர்பேட்டை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் உள்ள 24 வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 16 நகரமன்ற உறுப்பினர்கள் பதவிகளை திமுகவும் 4 நகரமன்ற உறுப்பினர்கள் பதவிகளை திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக,விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் பதவிகளை 4 நகரமன்ற உறுப்பினர்கள் பதவிகளை அதிமுகவும் கைப்பற்றினர்.

வெற்றிபெற்ற 24 நகரமன்ற உறுப்பினர்களும் உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும் நகராட்சி ஆணையருமான சரவணன் மற்றும் தேர்தல் மேற்பார்வையாளர் குமாரி ஆகியோரின் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன், ஒன்றிய குழு தலைவர் ராஜவேல் மற்றும் விஜயகுமார் ஆகியோரின் முன்னிலையில் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டும் நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டும் நேர்மையுடனும் தனது பணியை செய்வேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு பதவி ஏற்றுக் கொண்டனர்.

பதவியேற்றுக் கொண்ட உறுப்பினர்களுக்கு நகராட்சியின் சார்பில் ஆணையர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில், கட்சி பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் மக்களுக்கு சேவை செய்து நமது நகராட்சியை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கி தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் நகர செயலாளர் டேனியல் ராஜ் நகர அவைத்தலைவர் சிவராஜ் மகளிர் அணி துணை அமைப்பாளர் குருமனோ மற்றும் நகரமன்ற உறுப்பினர்களின் உறவினர்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Updated On: 3 March 2022 2:25 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  2000 Rupees Note News in Tamil - மக்கள் கைகளில் இருந்து மறைந்துவிட்ட 2...
 2. நாமக்கல்
  நாமக்கல் பெரியபட்டியில் எம்.எல்.ஏ. திறந்து வைத்த புதிய சத்துணவு
 3. ஆன்மீகம்
  Palani in Tamil - தென்னிந்தியாவில், ஒரு முக்கிய புனித தலமாக விளங்கும்...
 4. திருவள்ளூர்
  வெள்ளப்பெருக்கால் ஆரணியாற்றை கடக்க முடியாமல் 10 கிராம மக்கள் அவதி
 5. தேனி
  டெல்லியில் அண்ணாமலை..! பா.ஜ.க. மவுனம் கலையுமா ?
 6. தமிழ்நாடு
  Richest district in Tamilnadu தமிழ்நாட்டில் பணக்கார மாட்டம் எது...
 7. ஆன்மீகம்
  Sivan 108 Potri - இறையருளைப் பெற தினமும் 108 சிவன் போற்றி...
 8. தேனி
  உஷார்... செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு
 9. சினிமா
  Chandramukhi 2 டபுள் சந்திரமுகி..! பேயே இறங்கி வந்து ஆடுது...! -...
 10. லைஃப்ஸ்டைல்
  Udal edai kuraiya tips in tamil உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம்?