Begin typing your search above and press return to search.
வாக்களிக்க அனுமதி மறுப்பு: பெண் வாக்காளரின் மாமனார் வாக்குவாதம்
உளுந்தூர்பேட்டையில் வாக்களிக்க அனுமதிக்காததால் பெண் வாக்காளரின் மாமனார் பூத் ஏஜெண்டுகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
HIGHLIGHTS

மருமகளுக்கு வாக்களிக்க அனுமதி கோரி தகராறில் ஈடுபட்ட மாமனார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசுந்தரி. இவரின் பெயர் அங்கனூர் ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவர் வாக்களிக்கச் சென்றபோது வாக்குச்சாவடியில் இருந்த பூத் ஏஜெண்டுகள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. அதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் மாமனார் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனத்தகராறில் ஈடுபட்டார்.
அப்போது பூத் ஏஜெண்டுகளுக்கும் அவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவஇடத்தில் இருந்த காவல் துறையினர் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பினர்.