Begin typing your search above and press return to search.
லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய இளநிலை உதவியாளர் கைது
திருநாவலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ரூபாய் 32 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்
HIGHLIGHTS

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட திருநாவலூர் நெல் கொள்முதல் நிலைய இளநிலை உதவியாளர் குணசேகரன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ரூபாய் 32 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விவசாயி ஏழுமலை என்பவரிடம் 650 மூட்டை நெல்லை கொள்முதல் செய்ய குணசேகரன் ரூபாய் 32 ஆயிரத்து 500 லஞ்சம் கேட்டுள்ளார். முதல் தவணையாக ஏற்கனவே பத்தாயிரம் ரூபாய் வாங்கிய நிலையில், மீதமுள்ள 22,000 பெற்றபோது லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் குணசேகரன் பிடிபட்டார்.