Begin typing your search above and press return to search.
உளுந்தூர்பேட்டை அருகே 30, 31ம் தேதிகளில் கபடி திருவிழா: ரூ.40,000 பரிசுகள்
உளுந்தூர்பேட்டை அருகே 2 நாட்கள் நடைபெறும் கபடி திருவிழாவில் ரூ.40,000க்கும் மேற்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
HIGHLIGHTS

பைல் படம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டுநெமலி கிராமத்தில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முதலாமாண்டு மாபெரும் கபடி திருவிழா நடத்துகின்றனர். இந்த கபடித்திருவிழா வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள ரூ.400 நுழைவுக்கட்டணம் நிர்ணியிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.15,000, 2ம் பரிசாக ரூ.10,000, 3ம் பரிசாக ரூ.8,000, 4ம் பரிசாக ரூ.5,000, 5ம் பரிசாக ரூ.3,000 என பரிசளிக்கப்படும். இதனுடன் கோப்பைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.