Begin typing your search above and press return to search.
உளுந்தூர்பேட்டை அருகே மது பாட்டில் கடத்தல்; அரசு பேருந்து நடத்துனர் கைது
பெங்களூரில் இருந்து மினி வேனில்மது பாட்டில்களை கடத்தி வந்த, பேருந்து நடத்துனர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS

மாதிரி படம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், எல்லை கிராமம் ஏரி பகுதியில், போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனை நிறுத்தி, சோதனை செய்தபோது அதில், 670 மது பாட்டில்கள் இருந்தன.
உளுந்துார்பேட்டை அடுத்த நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன், சக்திவேல் ஆகியோர் பெங்களூரில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
பாஸ்கரன், திருக்கோவிலுார் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிகிறார். போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். மது பாட்டில்கள், மினி வேனை பறிமுதல் செய்தனர்.