சங்கராபுரம் அருகே சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சங்கராபுரம் அருகே சாலை ஆக்கிரமிப்புகளை வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் அகற்றப்பட்டன.
HIGHLIGHTS

அகற்றப்படும் சாலை ஆக்கிரமிப்புகள் .
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த சு.குளத்தூர் கிராமத்திலிருந்து தார் சாலைக்கு செல்ல வரகூர் செல்லும் சாலை வழியில் கடந்த காலத்தில் வழி இருந்துள்ளது. நாளடைவில் இந்த சாலையை தனிநபர் ஆக்கிரமித்து விட்டனர்.
இது குறித்து கிராம மக்கள் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனிடம் புகார் மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர்கள் கொண்டு சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அளவீடு செய்தனர்.
பின்னர் 35 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலையில் அகற்றப்பட்டது. அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் உடனிருந்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் பிடியோவிடம் கோரிக்கை வைத்தனர்.