/* */

உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கத்தின் திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம்

உளுந்தூர்பேட்டை தமிழ்ச்சங்கம் மற்றும் அருணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கத்தின் திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம்
X

உளுந்தூர்பேட்டை தமிழ்ச்சங்கம் மற்றும் அருணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து திருவள்ளுவர் தின விழா கொரட்டங் குறிச்சியில் உள்ள அருணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் அருணா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் அருணா தொல்காப்பியன் தலைமை வகித்தார்.

இந்த விழாவில் துணைத்தலைவர் காசி செல்வராசு முன்னிலை வகித்தார். பேராசிரியர் முனைவர் க. ரவிச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அ.ஜெ.மணிக்கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருவள்ளுவர் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி வாகைசூடிய மாணவர்களுக்கு திருக்குறள் நினைவு பரிசும், பொங்கல் பரிசும் வழங்கி பேசுகையில், உலகத்தின் பொதுமறையாக விளங்கக்கூடிய திருக்குறள் தேசியநூலக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும். தமிழர்களின் மிகச்சிறந்த அடையாளமாக முகவரியாக திருக்குறள் திகழ்கிறது.

இதன்பொருட்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி கன்னியாகுமரியில் 133 அடி உயர உருவச் சிலையை நிறுவினார். மற்றும் பேருந்துகளில் திருக்குறள் இடம்பெறச் செய்தார். பழம்பெரும் மொழியான தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி பெற்றுத் தந்ததும் அல்லாமல் தமிழின் பால் ஈடுபாடு கொண்டு பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார்.

இத்தகைய சிறப்பு மிக்க தமிழ்மொழியை நம் பெருமையை உலகம் முழுவதும் எடுத்து செல்ல வேண்டும். அதற்கே உளுந்தூர்பேட்டை தமிழ்ச்சங்கம் மிகச்சிறந்த களமாகத் திகழ வேண்டும். நான்தமிழ்ச் சங்கத்தில் புரவலராக இருப்பது நினைத்து பெருமிதம் அடைகின்றேன்‌.

இச்சங்கம் இன்னும் பல அறிய செயல்களைச் செய்து தமிழுக்குத் தொண்டாற்ற வேண்டும். பல்வேறு வகையான இலக்கண இலக்கியங்களை மீட்டுருவாக்கம் செய்யவும் புதிய சொல்லாட்சிகள் கண்டுபிடிக்கவும் வேண்டும். உளுந்தூர்பேட்டை சுற்றியுள்ள எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் கவிஞர்கள் இதிலேயே களப்பணி ஆற்ற வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராஜவேல், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய பெருந்தலைவர் சாந்தி இளங்கோவன், ஆத்ம விவசாய குழு தலைவர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் கதிரேசன், சின்ன சேலம் தமிழ்ச் சங்க தலைவர் கவிதைத்தம்பி, நூலாசிரியர் ஜெயபிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்துரை நல்கினர்.

ஆசிரியர்கள் த.கோபால், க. கனகசபை, ஆசிரியர் மோகன், கவிஞர் மணிபாலன், பத்திரிகையாளர் அ.முத்துக்குமரன் ஆகியோர் மகிழ் உரை வழங்கினார். இச்சங்கத்தில் சங்க நிர்வாகிகள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஊர் பொதுமக்கள், கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இறுதியில் ஆசிரியர் காசி, செல்வராசு நன்றி தெரிவித்தார்.

Updated On: 15 Jan 2022 2:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  2. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  3. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  6. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  9. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  10. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?