/* */

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டி: ஆட்சியர் அழைப்பு

மாவட்டத்தில் 02.10.2021 சனிக்கிழமை காலை பள்ளிமாணவர்களுக்கும், மாலை கல்லூரி மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படும்

HIGHLIGHTS

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே  பேச்சுப் போட்டி: ஆட்சியர்  அழைப்பு
X

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 02.10.2021 சனிக்கிழமை அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021 - 2022 -ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களாக மகாத்மா காந்தி, ஜவர்ஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளையொட்டியும், நவம்பர் 14-ஆம் நாள் ஐவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளையொட்டியும் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தனிதனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகைகள் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 02.10.2021 சனிக்கிழமை முற்பகல் பள்ளிமாணவர்களுக்கும், பிற்பகல் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப் போட்டிகள் தனித்தனியே நடத்தப்பட உள்ளன.

இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல்பரிசு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு ரூ.3,000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையிலும், இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல்பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையிலும் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

மேலும், பள்ளி மாணவர்களுக்கோ நடத்தப்பெறும் பேச்சுப்போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000/- வீதம் வழங்கப்படவுள்ளது. இப்போட்டியானது 02.10.2021 அன்று காலை 10.00 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசு மாதிரியார்.மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்படவுள்ளது.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பரிசு மற்றும் பாராட்டு சான்றிலழ் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Sep 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  3. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  4. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  5. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  6. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  7. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    பொடுகுக்கு இயற்கையான தீர்வுகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. ஆன்மீகம்
    திருப்புகழை பாட பாட வாழ்க்கை மணக்கும் - திருப்புகழ் பெருமையை...
  10. ஈரோடு
    ஈரோடு அபிராமி கிட்னி கேரில் ஒரே நாளில் 2 சிறுநீரக மாற்று அறுவை...