/* */

திமுக தேர்தல் பணி குறித்து கள்ளக்குறிச்சியில் அமைச்சர் ஆய்வு

அலுவலத்திற்கு சென்று, வார்டுகளில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகள் வழங்கினார்.

HIGHLIGHTS

திமுக தேர்தல் பணி குறித்து கள்ளக்குறிச்சியில் அமைச்சர் ஆய்வு
X

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் தி.மு.க.,வின் தேர்தல் பணிகள் தொடர்பாக அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். 

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் தி.மு.க.,வின் தேர்தல் பணிகள் தொடர்பாக அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், தி.மு.க., 18 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான காங்., - மா.கம்யூ., -வி.சி., தலா ஒரு இடத்திலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது.

தி.மு.க., வேட்பாளர்கள், ஒவ்வொரு வார்டுகளிலும் தேர்தல் அலுவலகத்தை திறந்து வார்டுகளில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு, கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் தி.மு.க.,வினர் மேற்கொள்ளும் தேர்தல் பணிகள் தொடர்பாக நேற்று ஆய்வு செய்தார்.அதில், தி.மு.க., வேட்பாளர்கள் அமைத்துள்ள தேர்தல் அலுவலத்திற்கு சென்று, வார்டுகளில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகள் வழங்கினார்.

இதில், மாவட்ட பொறுப்பாளர்கள் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., உதயசூரியன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் சுப்ராயலு, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 10 Feb 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  2. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  3. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  5. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  7. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  8. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  9. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  10. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?