Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் ஊழியர் கொலை: கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
HIGHLIGHTS

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஒரக்கடம் டாஸ்மாக் விற்பனையாளர்கள் கத்தியால் குத்தி தாக்கப்பட்டதில் ஒருவர் இறந்தார். இச்சம்பவத்தை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை கடையை அடைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பணியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
டாஸ்மாக் பணியாளரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இறந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.