/* */

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
X

மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021-ம் ஆண்டு காலியிடங்களை நிரப்ப மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் 30.10.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021ஆம் ஆண்டிற்கான முதல்கட்ட மாவட்ட கலந்தாய்வு 23.09.2021 வரை நடைபெற்றது. பயிற்சியாளர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு காலியிடங்களை பூர்த்தி செய்ய நேரடிச் சேர்க்கை 24.08.2021 முதல் 15.09.2021 வரை நடைபெற்றது.

தற்போது காலியிடங்களை 100 சதவீத நிரப்பிட நேரடிச் சேர்க்கைக்கான கால அவகாசம் மீண்டும் 30.10.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அந்தந்த தொழிற்பிரிவுகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்கள் உரிய இன ஒதுக்கீட்டில் நேரடி சேர்க்கை மூலம் நிரப்பப்படவுள்ளது. எனவே 10-ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் அருகாமையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகி பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும், முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், உளுந்தூர்பேட்டை தொலைபேசி எண் 04149-222333, 9080187127 முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், சங்கராபுரம் தொலைபேசி எண்.04151-235258-லும் மற்றும் முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், சின்னசேலம் தொலைபேசி எண். 9380114610 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 14 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  3. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  4. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  5. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  6. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  7. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  8. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  9. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  10. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்: