/* */

கள்ளக்குறிச்சி: மின்னணு வாக்கு இயந்திரத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு

கள்ளக்குறிச்சியில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி: மின்னணு வாக்கு இயந்திரத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு
X

குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால், இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி அறையில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், 'பெல்' நிறுவன பொறியாளர்கள் மூலம், முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, அதில், 5 சதவீதம் இயந்திரங்களை கொண்டு, மாதிரி ஓட்டுபதிவுக்கு மேற்கொள்ளப்பட்டது. 16 கட்டுபாட்டு இயந்திரங்களில், ஒவ்வொரு இயந்திரத்திலும் 1,000 மாதிரி ஓட்டுப்பதிவுகள் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது.

பின்னர் அவை சரிபார்க்கப்பட்டு, மின்னணு இயந்திரங்கள் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 'சீல்' வைத்து தேர்தலின் போது பயன்படுத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் குமாரி, முரளி, நகராட்சி கமிஷனர் குமரன் மற்றும் அரசியல் கட்சி பிரநிதிகள் பங்கேற்றனர்.

Updated On: 10 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?