/* */

டிஆர்ஓ விஜய் பாபு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் டிஆர்ஓ விஜய் பாபு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

டிஆர்ஓ விஜய் பாபு  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கே சென்று டிஆர்ஓ மனுக்களைப் பெற்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாற்றுதல் தொழில் தொடங்க கடன் உதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மனுக்கள் தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டறிந்து மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒரு நோய் தொற்றுகளில் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் இரண்டு தவணைகள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும் போது கட்டாயமாக முக கவசம் அணிந்து செல்லவேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார். இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்று திறனாளிகளிடம் 27 மற்றும் பொதுமக்களிடம் 329 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனித்துணை ஆட்சியர் திருமதி ராஜமணி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்பிரமணி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Dec 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...