/* */

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை: கலெக்டர்

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றார் ஆட்சியர்

HIGHLIGHTS

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை: கலெக்டர்
X

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டுகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தாார் கள்ளக்குறிச்சி மற்றும் சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் தலா 200 ஆக்சிஜன் படுக்கை, 100 சாதாரண படுக்கைகள் தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், அவர் கூறுகையில், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்படி, முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றார் ஆட்சியர்.

இதில், சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் பூங்கொடி, கொரோனா நோடல் அலுவலர் சிவக்குமார், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நேரு, நகராட்சி கமிஷனர் குமரன் மற்றும் மருத்துவர்கள் பழமலை, பொற்செல்வி, கராமத், மருத்துவ பேராசிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 6 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  2. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  3. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  5. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  6. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  7. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  8. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  9. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?