/* */

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் தொடங்கிவைத்து ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று தொடங்கிவைத்து ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் தொடங்கிவைத்து ஆய்வு
X

சேலம் பிரதான சாலையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட எம்.ஆர்.என் சாலை, சேலம் பிரதான சாலை, பசுங்காயமங்களம் ஆகிய பகுதிகளில் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமினையொட்டி வடிகால் வாய்க்கால்கள் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படுவதை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு அரசு அனைத்து ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்திடும் வகையில் 20.09.2021 முதல் 25.09.2021 வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் நடத்த அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள 20.05-2021 முதல் 25.09.2021 வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் அறிவிக்கப்பட்டு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் அனைத்து மழைநீர் வடிகால்களையும் தூர் வாரிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால்களை பொக்லைன் இயந்திரம், ஜேசிபி இயந்திரம் மற்றும் உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களைக் கொண்டு உரிய பாதுகாப்புடன் வடிகாலின் ஆரம்பம் முதல் முடிவு வரை சிறிதும் விடுபடாமல் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால்களில் ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருப்பின் பணிக்கு முந்தைய தினமே சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புதாரர்களுக்கு தெரியப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சிறுபாலங்களில் படியாக அகற்றி கழிவர் தடையின்றி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும், அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமின் முதல் நாளான இன்று கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட எம்.ஆர்.என் நகர், சேலம் பிரதான சாலையில் உள்ள ஏமப்பேர் குளத்திலிருந்து நீர் வெளியேறும் வடிகால் வாய்க்கால்கள் மற்றும் பசுங்காயமங்களம் குடியிருப்பு பகுதி ஆகிய இடங்களில் உள்ள வடிகால் வாய்க்கால்களை தூர்வாரும் பணி துவங்கி வைக்கப்பட்டு இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை 25.09.2021-க்கும். முடித்து வடகிழக்கு பருவமழையின்போது மழைநீர் தங்கு தடையின்றி வெளியேற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இவ்வாய்வின்போது, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் திரு.குமரன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உடனிருந்தனர்.

Updated On: 20 Sep 2021 4:08 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...