/* */

கள்ளக்குறிச்சி உள்ளாட்சி தேர்தலில் திமுக வசமான 9 ஒன்றிய சேர்மன் பதவிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 180 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளில் தி.மு.க., 145 இடங்களை கைப்பற்றியது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி உள்ளாட்சி தேர்தலில் திமுக வசமான 9 ஒன்றிய சேர்மன் பதவிகள்
X
பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உள்ளாட்சி பதவிகளுக்கு 19 மாவட்ட கவுன்சிலர்கள், 180 ஒன்றிய கவுன்சிலர்கள், 412 ஊராட்சித் தலைவர்கள், 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3,773 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 2 மாவட்ட கவுன்சிலர், 3 ஒன்றிய கவுன்சிலர், 29 ஊராட்சித் தலைவர்கள், 454 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 488 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மீதமுள்ள 3,285 உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகளின் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளாக கருதப்படும் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளை பிடிப்பதற்கு தி.மு.க., - அ.தி.மு.க., வினரிடையே பல இடங்களில் நேரடி போட்டி நிலவியது.பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. மேலும், தி.மு.க., கூட்டணி கட்சிகளான காங்., - ம.தி.மு.க., - மா.கம்யூ., - வி.சி., ஒரு சில இடங்களில் போட்டியிட்டன.

தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. மாவட்டத்தில், 19 மாவட்ட கவுன்சிலர் பதவியிடத்திலும் தி.மு.க., வெற்றி பெற்று தக்க வைத்து கொண்டது. அதேபோல், 9 ஒன்றியங்களிலும் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.

ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 23 ஒன்றிய கவுன்சிலர்களில் தி.மு.க., 18, அ.தி.மு.க., 2, வி.சி., 1, சுயேச்சை 2 வெற்றி. சங்கராபுரம் ஒன்றியத்தில் 24 இடங்களில் தி.மு.க., 20, அ.தி.மு.க., - மா.கம்யூ.,- வி.சி., மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

சின்னசேலம் ஒன்றியத்தில் 21 இடங்களில் தி.மு.க., 17, அ.தி.மு.க., 3, காங்., 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. தியாகதுருகம் ஒன்றியத்தில் 16 இடங்களில் தி.மு.க., 14, அ.தி.மு.க., 2 இடங்களில் வெற்றி பெற்றது.

கல்வராயன்மலை ஒன்றியத்தில் 7 ஒன்றிய கவுன்சிலர் பதவியையும் தி.மு.க., தக்க வைத்துக் கொண்டது. ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 25 இடங்களில் தி.மு.க., 21, அ.தி.மு.க., 3, சுயேச்சை 1 வெற்றிபெற்றது.

திருக்கோவிலுார் ஒன்றியத்தில் 23 இடங்களில் தி.மு.க., 20, அ.தி.மு.க., 2, சுயேச்சை 1 வெற்றி. திருநாவலுார் ஒன்றியத்தில் 20 இடங்களில் தி.மு.க., 13, அ.தி.மு.க., 2, மா.கம்யூ., 1, ம.தி.மு.க., 1, வி.சி., 1, சுயேச்சை 2 வெற்றி. உளுந்துார்பேட்டை ஒன்றியத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர்களில் தி.மு.க., 15, அ.தி.மு.க., 1, பா.ம.க., 1, வி.சி., 1, சுயேச்சை 3 வெற்றி. மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் தி.மு.க., 145 இடங்களிலும் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான வி.சி., 4, மா.கம்யூ., 2, காங்., 1, ம.தி.மு.க., 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல் அதிமுக 16 இடங்களிலும் பாமக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சையாக 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் 9 ஒன்றிய சேர்மன் பதவிகள் மற்றும் மாவட்ட சேர்மன் பதவி திமுக வசம் சென்றுள்ளது. அடுத்த கட்டமாக ஒன்றிய சேர்மன் பதவியை பிடிப்பதில் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலர் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.

Updated On: 14 Oct 2021 8:06 AM GMT

Related News