பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று திருப்பூர் வருகை

இன்று திருப்பூருக்கு வருகை தரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா , கட்சி தலைமையகத்தை திறந்து வைக்கிறார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று திருப்பூர் வருகை
X

ஜே.பி. நட்டா

தமிழக பாஜக, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கட்சி அலுவலகங்களை சொந்தமாக கட்டி வருகிறது. இதில், முதல் கட்டமாக 17 மாவட்டங்களில், இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், திருப்பூர், ஈரோடு, நெல்லை, திருப்பத்தூர் மாவட்ட பாஜக அலுவலகங்கள் தயார் நிலையில் உள்ளன.

இக்கட்டிடங்களை, திருப்பூரில் இன்று நடைபெறும் நிகழ்வில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைக்கிறார். இதற்காக, இன்று மதியம் 12.15 மணிக்கு கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் ஜே.பி. நட்டா திருப்பூர் வருகிறார். மதிய உணவுக்கு பின்னர், 2.30 மணிக்கு திருப்பூர் வீரபாண்டியில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் மாநில செயற்குழு கூட்டத்தில், அவர் ஆலோசனை நடத்துகிறார்.

இதில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு, திருப்பூர், பல்லடம் மெயின்ரோடு வித்யாலயம் பகுதியில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை ஜே.பி.நட்டா திறந்து வைக்கிறார்.

அதே நிகழ்வில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஈரோடு, நெல்லை, திருப்பத்தூர் மாவட்ட பாஜக அலுவலகங்களையும் அவர் திறந்து வைக்கிறார். இன்று மாலை, திருப்பூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஜே.பி. நட்டா உரையாற்றுகிறார்.

Updated On: 24 Nov 2021 3:15 AM GMT

Related News