பள்ளிகளில் இனி தனித்திறன் பயிற்சி வகுப்புகள் - மாணவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா?

பள்ளிகளில், 6ம் முதல் 9ம் வகுப்பு வரை மாணவர் தனித்திறன் பயிற்சி வகுப்புகளை கட்டாயம் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இத்திட்டம், மாணவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா, என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பள்ளிகளில் இனி தனித்திறன் பயிற்சி வகுப்புகள் - மாணவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா?
X

பள்ளிகளில், இனி கலை, பண்பாட்டு பயிற்சி வகுப்புகளை நடத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இனி கலை, பண்பாட்டு தொடர்பான 'எக்ஸ்டரா கரிக்குலம் ஆக்டிவிடீஸ்' எனப்படும், தனித்திறன் பயிற்சி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் அதிகம் நிறைந்த இந்த நவீன உலகில் மாணவர்கள் எதிர்காலத்தில் வெற்றியாளர்களாக வலம்வர, பள்ளி ஆண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுவது அடிப்படையாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே மதிப்பெண்ணை மையமாக கொண்டே சுழலும் மாணவர்களின் உலகில், பெரியோரை மதித்தல், தோல்விகளை எப்படி எதிர்கொள்வது, மனித உறவுகளின் மதிப்பு போன்ற வாழ்வின் முக்கியமான விழுமியங்கள் அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகின்றன.

இளம்வயதில் மாணவர்கள் எப்படி வழிநடத்தப்படுகிறார்களோ, அந்த மனநிலையை பொருத்தே அவர்களது எதிர்கால வாழ்க்கை அமைகிறது. இன்றைய இண்டர்நெட் உலகில், மாணவர்கள் மொபைல் போன்களில் தங்களது பெரும்பாலான நேரத்தை இழக்கின்றனர். வீடியோ கேம்ஸ்களில் மூழ்கி போகின்றனர். தங்களது தனித்திறமைகளை உணர்ந்து, அதை வெளியே கொண்டுவந்து, இன்னும் திறமையை மேம்படுத்தி கொண்டு, அதையே தங்களது எதிர்கால வளமான வாழ்க்கைக்கு உதவும் வகையில் உருவாக்கி கொள்ளாமல், நாட்களை வீணாக கழிக்கின்றனர்.

இன்னும் பல மாணவர்கள், சினிமா நடிகர்களின் மீது அபரிதமான ஆர்வம் கொண்டு, அவர்களை பற்றி பேசிக்கொண்டு, அவர்களது சினிமாக்களை பார்த்துக்கொண்டு நேரத்தை வீணாக்குகின்றனர். காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்பதை உணராமல், மாணவ சமுதாயம், கல்வி கற்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் வாழ்க்கைக்கு உதவும் முக்கிய விஷயங்களில் தங்களது கவனத்தை திசை திருப்ப வேண்டும். வாழ்க்கைக்கும் அது உதவும் செயலாக அது இருப்பது மிக அவசியம்.


எப்போதும் தேர்வு, மதிப்பெண் என்றே மாணவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், அவர்கள் இனம்புரியாத மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர். தோல்விகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் மனநிலை வளர்த்து கொள்வதற்கு பதிலாக மனஅழுத்தத்துக்கு ஆளாகும் மாணவர்கள், ஒருகட்டத்தி்ல் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மாணவர்களின் இந்த அவலநிலையை மாற்றி வாழ்க்கையை அவர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ள அவர்களை மனதளவில் தயார் செய்ய, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில் முக்கிய அம்சமாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி அவர்களது தனித்திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக கலை, பண்பாட்டு பாடங்களும் கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இயல், இசை, நாடகம், நடனம், நாட்டுப்புற கலை, காட்சிக் கலை உள்ளிட்ட கலை, பண்பாட்டு செயல்பாடுகளில ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும், இந்த செயல்பாடுகளில் பங்கேற்பதற்காக அவர்களின் பள்ளி கால அட்டவணையில் வாரத்துக்கு இரண்டு வகுப்புகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தனித்திறன் வளர்ப்பு பயிற்சிக்கான இந்த பாடங்களை மாணவர்களுக்கு சிறப்பாக போதிக்க, இத்துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த கலைஞர்களை பள்ளி நிர்வாகங்கள் பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கலந்துகொள்ள வேண்டும். கலை, பண்பாட்டு செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்ற அரசின் அறிவிப்பும் குறிப்பிடதக்கது.

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைத்து, அவர்களை பன்முகத் திறமை கொண்டவர்களாகவும், படிப்பை தாண்டி அவர்களின் தனித்திறனை வளர்க்கும் நோக்கிலும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, நடப்பு கல்லியாண்டு (2022 -23) முதல, 6- 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வார ஒருமுறை நீதி போதனைகள் வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கலை, பண்பாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

கூட்டு குடும்பங்கள் குறைந்து, தனி குடும்பங்கள் அதிகரித்துள்ள இன்றைய நவீனகால வாழ்க்கை சூழலில் வீட்டில் தாத்தா, பாட்டிகளிடம் நீதிக் கதைகளை கேட்கும் வாய்ப்பை இழந்துள்ள இந்த தலைமுறை மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


மாணவ சமுதாயத்தை பொருத்தவரை புத்தக அறிவு என்பது, தேர்வுகளில் மதிப்பெண்களை அதிகரிக்க மட்டுமே உதவுகிறது. ஏனெனில், பள்ளி, கல்லுாரியில் மாணவனாக படித்து முடித்த பின், சமுதாயத்துக்குள் ஒரு மனிதனாக நுழையும்போது, அந்த மனிதன் எதிர்கொள்ளும் சவால்களும், சிக்கல்களும் ஏராளம். அவற்றை எல்லாம், எதிர்கொண்டு போராடவும், சமுதாயத்தில் வெற்றி பெற்ற மனிதனாக நிலைத்து நிற்கவும் உடலில் மட்டுமின்றி, மனதளவிலும் அவன் பலசாலியாக இருக்க வேண்டும்.

பள்ளிகளில் நடத்தப்படும் கலை, பண்பாடு, நீதிபோதனை வகுப்புகளால் மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய தொலைநோக்கு சிந்தனை தானாக ஏற்படும். வாழ்வியல் பற்றிய பல்வேறு சிந்தனைகள் மேலோங்கும். வாழ்க்கை குறித்த வினாக்களும், அதுபற்றிய சந்தேகங்களும் இன்னும் அவர்களை நிறைய கற்க துாண்டும். கற்க, கற்க இன்னும் அறிவுசார்ந்த தேடல்கள் விரிவடையும். இதுபோன்ற கற்றுத்தெளிந்த ஒரு இளைய சமுதாயம் உருவானால் அது, அவர்களது வளர்ச்சிக்கு மட்டுமின்றி, சமுதாய வளர்ச்சிக்கும் பக்கபலமாய் அமையும்.

எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கொண்டு வரப்படும் 'எக்ஸ்ட்ரா கரிக்குலம் ஆக்டிவிடீஸ்' எனப்படும் பாடங்கள் சாராத கூடுதல் திறன் வளர்ப்பு சார்ந்த இந்த தனித்திறன் பயிற்சி வகுப்புகளால், நல்ல பயன்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பது கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதை சிறப்பான முறையில் கொண்டு செல்வது, பள்ளி கல்வித்துறையின் கைகளிலும், சிறப்பாக இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்வதும் மாணவ, மாணவியர் கைகளில்தான் உள்ளது.

Updated On: 22 Sep 2022 5:53 PM GMT

Related News