/* */

நெருங்குது சுதந்திர தினவிழா பாதுகாப்பில் போலீசார் தீவிரம்

Independence Day Tamil - தமிழகத்தின் முக்கிய நகரங்களில், சுதந்திர தினத்தையொட்டி போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது.

HIGHLIGHTS

நெருங்குது சுதந்திர தினவிழா  பாதுகாப்பில் போலீசார் தீவிரம்
X

சுதந்திர தினவிழாவையொட்டி, முக்கிய நகரங்களில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில், உஷாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Independence Day Tamil - வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பொது இடங்கள், பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையம் மற்றும் பிரதான கடைவீதிகள், கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் என, முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் உடைமைகள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பின்னரே, அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள், சில மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்து, பாதுகாப்பு சார்ந்த சோதனைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முக்கிய நகரங்களில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்டுகள், மற்றும் கோவில்களில் போலீசார் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சுதந்திர தின பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். வரும் 20 ம் தேதி வரை, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் முழு கவனத்துடன் உஷார் நிலையில் இருக்க, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 11:22 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!