/* */

ஒரே ஜாடையில் பிறந்த இரட்டையர்களை அடையாளம் காண முடியுமா?

Identical Twins Meaning in Tamil-சிவகங்கை மாவட்டம் அங்காடி மங்கலம் என்ற கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் இருப்பதாக கூறப்படுகிறது

HIGHLIGHTS

ஒரே ஜாடையில் பிறந்த இரட்டையர்களை அடையாளம் காண முடியுமா?
X

ஒற்றுமை இரட்டையர்கள்

Identical Twins Meaning in Tamil-சிவாஜி கணேசன் நடித்த உத்தமபுத்திரன் முதல் வடிவேலு நடித்த இம்சை அரசன் வரை திரைப்படங்களில் இரட்டையர்கள் தோன்றுவதை பார்த்திருக்கிறோம். அவர்கள் இருவருக்கும் உருவ ஒற்றுமை ஒன்றாக இருந்தாலும் குணாதிசயங்கள் வேறுபட்டிருக்கும்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அமைந்துள்ளது அங்காடிமங்கலம் என்னும் கிராமம். இந்த பகுதியில், சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவற்றுள் 30க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் இருப்பதாக அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.


இரட்டையர்களாக பிறந்தவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதலாவது 'Identical twins' அதாவது ஒற்றுமை இரட்டைகள். மற்றொன்று 'Non-Identical Twins'

இரட்டை குழந்தை எப்படி உருவாகிறது?

ஒரு உயிரணு ஒரு கருமுட்டையோடு இணைந்த பின் கருவுற்ற முட்டையிலுள்ள செல் இரண்டாகப் பிரியும். இவ்வகையில் பிறக்கும் இரு குழந்தைகளும் பெண்களாகவோ, ஆண்களாகவோ மட்டுமே இருக்கும். ஒரு குழந்தை பெண்ணாகவும் மற்றொரு குழந்தை ஆணாகவும் இருக்க வாய்ப்பில்லை. மேலும் இந்த வகை இரட்டையர்களின் மரபணுக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். இவர்களின் முகத்தோற்றம், உடல்வாகு மற்றும் குணாதிசயங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். இப்படி உருவாகும் இரட்டையரை 'ஐடென்டிக்கல் ட்வின்ஸ்' (Identical Twins) என்கிறோம்.

அதேபோல இரண்டு உயிரணுக்கள் இரண்டு கருமுட்டைகளோடு தனித்தனியாக இணையும் பொழுது இரண்டு கருக்களுமே தனித்தனியாக வளர்ந்து இரண்டு குழந்தைகளாக உருவாகின்றன. இவ்வகையில் பிறக்கும் இருகுழந்தைகளில் ஒரு குழந்தை பெண்ணாகவும், மற்றொரு குழந்தை ஆணாகவும் இருக்கலாம். அல்லது இரு குழந்தைகளும் பெண்ணாகவோ, ஆணாகவோ கூட இருக்கலாம். இந்த வகை இரட்டையர்களின் மரபணுக்கள் வெவ்வேறாக இருக்கும்.

இவர்களின் முகத்தோற்றம், உடல்வாகு மற்றும் குணாதிசயங்களும் மாறுபட்டதாக இருக்கும். இவ்வகை குழந்தைகளை, 'நான் ஐடென்டிக்கல் ட்வின்ஸ்' (Non-Identical Twins) என்பார்கள். இருவருக்கும் தனித்தனியாக ரத்தம் செல்லும். ஒரே கருவிலிருந்தாலும் இரண்டு குழந்தைகளும் தனித்தனியாக வளர்வார்கள். உலகம் முழுவதும் இவ்வகை இரட்டையர்தான் அதிகம். சராசரி குழந்தைகளை விட, இரட்டையர் பிறக்கும்போது உடல் எடை சற்று குறைவாகவே இருக்கும்.


'ஐடென்டிகல் ட்வின்ஸா'க இருப்பவர்களுக்கு மரபணு பரிசோதனை மேற்கொண்டால் 99.99% ஒரே விதமான முடிவுகளைத்தான் பெற முடியும். மரபணு ஒரே மாதிரியாக இருந்தாலும், கைரேகையில் வித்தியாசம் காணப்படும். இதற்குக் காரணம் இருவரும் ஒரே கருமுட்டையில் வளர்ந்தவர்கள்

நம் உடலில் உள்ள செல் ஒன்றில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. மரபணு என்னும் உட்கரு குரோமோசோமில்தான் உள்ளது. அப்பா, அம்மாவின் குணங்களைக் குழந்தைக்குக் கொடுக்கும் மரபணுதான் இந்த டி.என்.ஏ ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் சேர்ந்து கரு உருவாகும்போது, அவற்றில் இருக்கின்ற குரோமோசோம்கள் இரண்டாகப் பிரியும்.

இந்த நிகழ்வுக்கு 'மியோசிஸ்’ (Meiosis) என்று பெயர். பொதுவாக, இந்த நிகழ்வில் 23 ஜோடி குரோமோசோம்கள் இரண்டு இரண்டாகப் பிரிந்து 46 குரோமோசோம்களாக மாறும். ஒரு கரு முட்டையும், உயிரணுவும் இணைந்து கருத்தரிக்கும் பொழுது, ஒரு முழுமையான செல்லாக மாறுகின்றது. இந்த செல் உருவான சில மணி நேரங்களில், ஒரு செல் இரண்டாகவும், இரண்டு நான்காகவும், நான்கு எட்டாகவும் பிரிய ஆரம்பித்து, கை, கால்கள், தலை என்று குழந்தை முழுவதுமாக வளர்கிறது. ஒரே கருமுட்டையில் பிறக்கும் ஐடென்டிக்கல் ட்வின்ஸ்-ன் நிறம், உயரம், சாயல், மரபணு என்று அனைத்தும் ஒன்றாகவே இருக்கும்.

இரட்டையர்களாகப் பிறந்தவர்களுக்கும் இதே விகிதத்தின்படி, இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருக்கிறது. இரண்டு குழந்தைகளின் மரபணு ஒரே மாதிரியாக இருந்தாலும், அவர்களின் மனநிலை வேறுபடலாம். இருவரும் ஒரே சூழ்நிலையில் வளர்ந்தாலும், இவர்களின் பழக்கவழக்கம், செயல்பாடு ஆகியவை வெவ்வேறாக இருக்கும்.

தனியாகப் பிறந்த குழந்தைகளைக் காட்டிலும் இரட்டையர் 22 சதவிகிதம் அதிகமாக இடதுகை பழக்கம் கொண்டவர்கள். மேலும், சாதாரணக் குழந்தைப் பிறக்கும் காலத்தைவிட 50 சதவிகிதம் இரட்டையர், 37 வாரத்துக்கு முன்பே பிறந்து விடுகின்றனர். இப்போது வரை இரட்டையர்களை எங்குப் பார்த்தாலும் ஆச்சர்யமாகத்தான் பார்க்கிறோம். அதிலும் ஒரே மாதிரி உடை, ஒரே மாதிரியான உடல், கண், காது என்று நுணுக்கமாக ஆராய்வோம்.

ஆனால், அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்குத்தான் தெரியும், அவர்களை வளர்த்தெடுப்பது எவ்வளவு சிரமம் என்று

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 March 2024 5:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு