/* */

சீருடை பணி உங்களைத் தேடி வரும்..! எப்படி? இப்படித்தான்..!

சீருடைப்பணிகள் பெறுவதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் தரப்பட்டுள்ளன. இது பின்பற்றப்பட்டால், வேலை உங்களைத்தேடி வரும்.

HIGHLIGHTS

சீருடை பணி உங்களைத் தேடி வரும்..! எப்படி? இப்படித்தான்..!
X

நம்மால முடியாதது எதுவும் இல்லை. எல்லாம் நமது நம்பிக்கையிலும் உழைப்பிலும் உள்ளது. வெற்றி என்பது ஒரு நிகழ்வு. ஆனால், தோல்வி பாடம். ஆகவே, தோல்விப்பாடங்கள் வெற்றியை நோக்கி நம்மை நகர்த்தும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி, ஆர்வம், கொஞ்சம் முயற்சி. இது போதும் உங்களை வாழ்வில் உயரச்செய்ய.

நாம் இன்னிக்கு பார்க்கப்போறது சீருடை பணியாளர் தேர்வு.

சீருடை பணியாளர் தேர்வு :

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வினை நடத்துகிறது.

இந்த வாரியத்தால் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டர், ஃபயர்மேன் போன்ற பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு எழுத்து தேர்வு,மருத்துவ பரிசோதனை,உடல் பரிசோதனை,தனிப்பட்ட நேர்காணல் போன்றவை இடம்பெறும். TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு, விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு கான்ஸ்டபிள் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு முறை :

  • வினாக்கள் அப்ஜெக்டிவ் டைப்பில் Multiple-choice question (MCQ) இருக்கும்.
  • இந்த தேர்வு 80 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். தேர்வில் தவறான விடைகளுக்கு எதிர்மறை இல்லை.
  • கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும். தேர்வு ஆஃப்லைனில் இருக்கும்.
  • I மற்றும் II ம் தாள்களில் தேர்ச்சி பெற அதிகபட்சம் 28 மதிப்பெண்கள் அவசியம்.

தமிழ்நாடு போலீஸ் கான்ஸ்டபிள் உடல் அளவீட்டு தேர்வு :

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு போலீஸ் கான்ஸ்டபிள் உடல் அளவீட்டுத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்தத் தேர்வு 30 மதிப்பெண்களைக் கொண்டது.

தமிழ்நாடு போலீஸ் கான்ஸ்டபிள் மருத்துவ பரிசோதனை :

உடல் அளவீட்டுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டும். இதற்கு 20 மதிப்பெண்கள் உண்டு.

தமிழ்நாடு போலீஸ் கான்ஸ்டபிள் தயாரிப்பு குறிப்புகள் :

முதலில், வினாக்களில் கடினமானது எளிதானது என்று பிரிக்கவும். கடினமான வினாக்களுடன் எழுதத் தொடங்குங்கள். பின்னர் இருக்கும் நேரத்தை எளிய வினாக்களுடன் செலவிடுங்கள். அதற்கேற்ப எழுதும் திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள். இந்த தேர்வுக்கு நீங்கள் தினசரி குறைந்தது 5 முதல் 6 மணிநேரம் செலவிட வேண்டும். தயாரிப்புக்குத்தேவையான புத்தகங்களை சேகரித்து வையுங்கள். இணையத்தில் கிடைக்கும் முக்கிய ஆதாரங்களையும் சேகரித்துக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே பரிசீலனை செய்துகொள்ளுங்கள். அதாவது உங்களுக்கு நீங்களே தேர்வு வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்களே எழுதிய தேர்வுகளை ஒரு குறிப்பு புத்தகமாக பராமரிக்கவும். பரீட்சை எழுதும் போது பயன்படுத்த வேண்டிய அனைத்து முக்கியமான மற்றும் பயனுள்ள புள்ளிகளைக் குறிப்பிடவும். பாடத்திட்டத்தை நிறைவு செய்வது அவசியம். கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் உள்ள சில தலைப்புகளை மட்டும் சார்ந்து இருக்க வேண்டாம். அனைத்து தலைப்புகளையும் நிறைவு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கும். பரீட்சைக்கு குறைந்தது 2 அல்லது 3 வாரங்களுக்கு முன் எழுதிப்பார்த்தவைகளை திருத்தம் செய்வதற்கு போதுமான நேரம் ஒதுக்க வேண்டும்.

நேர மேலாண்மை :

தேர்வுகளில் நேர மேலாண்மை என்பது ஒரு தனித்திறமை. அதிக வெயிட்டேஜ் கொண்ட தலைப்புகளுக்கு நேரத்தை கூடுதலாக ஒதுக்குவது அவசியம். நாளிதழ்கள், வரலாற்றுப் புத்தகங்கள் படிப்பது, செய்திகளைப் பார்ப்பது போன்றவற்றை தினமும் பின்பற்ற வேண்டும். முந்தைய போலீஸ் கான்ஸ்டபிள் வினாத்தாள்கள் அனைத்தையும் பார்க்கவும். இது பல்வேறு காலகட்டங்களில் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றி அறிந்துகொள்ள உதவும்.

TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் பின்பற்ற வேண்டிய விதிகள் :

  • கொடுக்கப்பட்ட அனைத்து கேள்விகளையும் படிக்கவும்.
  • முதலில், உங்களுக்குத் தெரிந்த கேள்விகளுக்கு விடையளியுங்கள். பிறகு கஷ்டமான வினாக்களுக்கு விடையளியுங்கள்.
  • வேகம் மற்றும் துல்லியம் ஆகியவை எந்தவொரு போட்டித் தேர்வையும் முறியடிப்பதற்கான திறவுகோல்கள்.
  • ஒரு கேள்விக்கான விடையைத் தேடுவதில் நேரத்தை வீணாக்கக் கூடாது.
  • தேர்வு எழுதும் போது உங்கள் கவனத்தை திசை திருப்ப எதையும் அனுமதிக்காதீர்கள்.
  • எதிர்மறை மதிப்பெண்கள் இல்லாததால், அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முயற்சிக்கவும்.
  • மதிப்பெண்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். கேள்விகளுக்கு பதிலளிக்க கொடுக்கப்பட்ட நேரத்தை பயன்படுத்தவும்.
  • தேர்வு குறித்த அச்சம் மனதில் இருக்கக்கூடாது. இது மோசமான முடிவுகளுக்கு வழிவகுக்கும்.
  • தேர்வில் மற்றவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். இது உங்கள் நேரத்தை வீணடிக்கும்.
  • இறுதியாக, கொடுக்கப்பட்ட அனைத்து பதில்களையும் சரிபார்க்கவும்.

தயாரிப்பு பணி :

விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு தயார்படுத்துவதை முன்கூட்டியே தொடங்க வேண்டும். எழுத்துத் தேர்வு என்பது அடிப்படை விஷயமாக இருப்பதால், தயாராகும் போது மன அழுத்தம் இருக்க கூடாது. முழு பாடத்திட்டத்தையும் முடிக்க குறைந்தது 2 மாதங்கள் தேவை. கடைசி நிமிடத்தில் தயாரிப்பது நல்லதல்ல. இது மன அழுத்தத்திற்கும் வழிவகுக்கிறது. எழுத்துத் தேர்வு தயாரிப்புக்கும், உடல் தகுதித் தேர்வுக்கும் சம முக்கியத்துவம் கொடுங்கள். ஆரோக்கியமாக சாப்பிடுங்கள் மற்றும் நீங்கள் படிக்கும் தலைப்புகளை மனதில் வைத்துக்கொள்ள முயற்சிக்கவும். மேலும், சில குறிப்பிட்ட பிரிவுகளை மட்டும் சார்ந்து இருக்காதீர்கள். தேர்வுக்கான இலக்கு என்பது பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும்.

இதை முறையாக பின்பற்றி நடந்தால் சீருடை பணி உங்களைத்தேடி வரும். வெற்றிபெற வாழ்த்துகள்.

Updated On: 22 March 2022 10:46 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  3. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  7. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  8. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  9. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  10. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...