/* */

பான் கார்ட். பெறுவது எப்படி? தமிழில் விளக்கம்..!

How To Apply Pan Card Online Tamil-பான் கார்ட். பெறுவது எப்படி? தமிழில் விளக்கம்..!

HIGHLIGHTS

பான் கார்ட். பெறுவது எப்படி? தமிழில் விளக்கம்..!
X

how to apply pan card online in tamil-பான் அட்டை (மாதிரி படம்)

புதிய Pan Card பெறுவதற்கு Online மூலம் எப்படி Apply செய்ய வேண்டும் என்பதை இங்கு நாம் பார்க்கப்போகிறோம்.

முதலில் பான் அட்டை என்பது என்ன ?

How To Apply Pan Card Online Tamil-பான் கார்டு என்பது வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 தனித்துவ இலக்கங்களை கொண்ட ஒரு அட்டையாகும். இந்த 10 இலக்கங்களில் எண்ணும் எழுத்தும் கலந்து இருக்கும். உதாரணம்: பான் எண், THGN9612R இப்படி இரண்டும் கலந்த வடிவில் இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் பான் அட்டை (Pan Card) அத்தியாவசிய அடையாள ஆவணமாக மாறிவிட்டது. வங்கிகள், தபால் நிலையங்கள், முதலீடுகள் போன்ற நிதி தொடர்பான அனைத்து இடங்களிலும் பான் அட்டை அத்தியாவசிமாகிறது.

ஒரு தனிநபர் அல்லது நிறுவனங்களின் அனைத்து நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கு பான் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பான் எண்ணை கொண்டு தனிநபர் அல்லது நிறுவனங்களின் பண பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை கண்காணிக்க முடியும்.

இப்படி நமது அத்திவாசிய தேவைகளில் ஒன்றாக உள்ள PAN Card அனைவரும் பெற்றிருக்க வேண்டும். உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் அதை எளிய முறையில் Online மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். அதற்கு உங்களுக்கு தமிழில் இங்கு வழிகாட்டப்பட்டுள்ளது.

புதிதாக PAN Card விண்ணப்பிக்க சில அடிப்படை ஆவணங்கள் வேண்டும். அவை :-

1. அடையாள சான்று (Identity Proof) -

2. முகவரிக்கான சான்று (Address Proof) -

3. வயதுக்கான சான்று (Date of Birth Proof) -

4. பாஸ்போர்ட் அளவுள்ள இரண்டு புகைப்படங்கள் (2 Passport Size Photos)

5. மின்னஞ்சல் முகவரி (Email Address)

6. மொபைல் நம்பர்

மேற்கண்டவற்றில் Email ID மற்றும் Mobile Number உங்களிடம் நிச்சயமாக இருக்கும். ஒருவேளை உங்களிடம் Email ID இல்லையென்றால், உங்களின் குடும்ப உறுப்பினர்களது Email ID யை பயன்படுத்தலாம்.

ஆன்லைன் மூலம் PAN Card க்கு விண்ணப்பம் செய்யும்போது Email Id கட்டாயமாகும். பான் கார்டுக்கு விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பம் Approve செய்யப்பட்டால், முதலில் e Pan Card -ஐ உங்களின் Email ID க்கு அனுப்புவார்கள். பிறகு Original PAN Card யை தபால் மூலம் அனுப்பி வைப்பார்கள்.

1. பின்வருவனவற்றுள் ஏதாவது ஒன்றை அடையாள சான்றாக பயன்படுத்தலாம்

ஆதார் அட்டை நகல்

ஓட்டுநர் உரிமம் நகல்

பாஸ்போர்ட் நகல்

ரேஷன் அட்டை நகல் (படம் உள்ளவர்கள் மட்டும்)

வாக்களிக்கும் அட்டை நகல்

2. பின்வருவனவற்றுள் ஏதாவது ஒன்றை முகவரி சான்றாக பயன்படுத்தலாம்

ஆதார் அட்டை

மின் கட்டண ரசீது

ஓட்டுநர் உரிமம்

பாஸ்போர்ட்

அஞ்சலக சேமிப்பு புத்தகம்

நீங்கள் மின்சார கட்டண பில்லை முகவரி ஆவணமாக பயன்படுத்தும்போது கடைசி 3 மாதங்களுக்குள்ளாக இருக்கக்கூடிய பில்லை பயன்படுத்த வேண்டும்.

3. பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பிறந்த தேதிக்கான சான்றாக பயன்படுத்தலாம்

ஆதார் அட்டை

பிறப்புச் சான்று

ஓட்டுநர் உரிமம்

திருமண சான்று

மதிப்பெண் சான்று

பாஸ்போர்ட் நகல்

வாக்களிக்கும் அட்டை

மேற்கண்ட அனைத்து ஆவணங்களின் பட்டியலில் ஆதார் அட்டை பொதுவாக உள்ளது. அதாவது அடையாள சான்று, முகவரி சான்று மற்றும் பிறந்த தேதி சான்று ஆகிய அனைத்திற்கும் ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்.

ஒருவேளை ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதற்கு பதிலாக பட்டியலில் உள்ள வேறு ஒரு ஆவணத்தை வழங்கலாம். ஆதார் அட்டையில் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் அனைத்து சான்றுகளுக்கும் அதை ஒன்றையே வழங்கலாம்.

பான் அட்டைக்கு எவ்வளவு கட்டணம்?

ஒரு புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கும் அல்லது ஏற்கனவே இருக்கும் பான் அட்டையில் PAN Correction மேற்கொள்வதற்கும் ஒரே தொகையாகும். இதற்காக நீங்கள் Rs.107 ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த பணத்தை உங்களின் வங்கிக்கணக்கில் இருந்து ATM Card, Net Banking, UPI மற்றும் Google Pay போன்றவற்றின் மூலம் செலுத்தலாம்.

மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை தபால் மூலம் அனுப்ப வேண்டும். அதற்கான தபால் செலவு 30 முதல் 40 ரூபாய் வரை ஆகலாம்.

மேற்கண்ட அனைத்து ஆவணங்களின் பட்டியலில் ஆதார் அட்டை பொதுவாக உள்ளது. அதாவது அடையாள சான்று, முகவரி சான்று மற்றும் பிறந்த தேதி சான்று ஆகிய அனைத்திற்கும் ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். ஒருவேளை ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதற்கு பதிலாக பட்டியலில் உள்ள வேறு ஒரு ஆவணத்தை வழங்கலாம். ஆதார் அட்டையில் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் அனைத்து சான்றுகளுக்கும் அதை ஒன்றையே வழங்கலாம்.

Steps to Apply for Pan Card Through Online in tamil

பொதுவாக PAN Card க்கு Online மூலம் Apply செய்யும் போது UTIITSL மற்றும் NSDL என்ற இரண்டு போர்டல்கள் மூலமாகத்தான் விண்ணப்பிப்பார்கள். இங்கு பான் அட்டையை UTIITSL என்ற Portal மூலம் எவ்வாறு விண்ணப்பம் செய்யலாம் என்பதை பார்ப்போம்.

படிகள் :

Step 1: முதலில் https://www.pan.utiitsl.com/ என்ற UTIITSL Portal யை பார்வையிடவும்.

Step 2: முதலில் உள்ள PAN Card as an Indian Citizen/NRI என்பதை தேர்வு செய்யவும்.

Step 3: இப்பொழுது Apply for new PAN Card (Form 49A) என்பதை தேர்வு செய்க.

Step 4: புதிய பான் அட்டையை விண்ணப்பிப்பதற்கான Form 49A பக்கம் திறக்கும். இங்கு Physical Mode என்று ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருக்கும். அதை அப்படியே விட்டுவிடுங்கள்.

Step 5: Status of the Applicant என்ற இடத்தில் Individual என்பதை தேர்வு செய்யவும். இதன் பொருள் தனிநபர் ஆகும்.

Step 6: Pan Card Mode என்ற இடத்தில் முதலாவதாக உள்ள Both physical PAN Card and e-PAN என்பதை தேர்வு செய்யவும். இதன் மூலம் நீங்கள் e-PAN Card மற்றும் Physical PAN Card ஆகிய இரண்டையும் பெற முடியும்.

Step 7: கீழே கடைசியில் உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும்.

Step 8: இப்பொழுது திரையில் தெரியும் Reference Number யை குறித்துக்கொண்டு Ok என்பதை அழுத்தவும்.

Step 9: ஆதார் அட்டையில் இருப்பதை போன்று உங்களின் Full Name ஐ Enter செய்ய வேண்டும்.

முதலில் Name Title ஐ தேர்வு செய்யவும். அதில் மூன்று தேர்வு இருக்கும். அவற்றில் உங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்யவும். அவைகள் :

KUMARI – திருமணம் ஆகாத பெண்கள்

SHRI – ஆண்கள்

SMT – திருமணமான பெண்கள்

அடுத்து உங்களின் முழு பெயரையும் Enter செய்யவும். உங்களின் பெயர் Rajeswari shanmugam என்ற வடிவில் இருந்தால் First Name என்ற இடத்தில் Rajeswariஎன்றும் Last Name / Surename என்ற இடத்தில் shanmugam என்று டைப் செய்யவும்.

ஒருவேளை உங்களின் பெயர் S.Rajeswari என்று இருந்தால் அதை Last Name / Surename என்ற இடத்தில் மட்டும் டைப் செய்தால் போதுமானது.

Name on Card என்ற இடத்தில், உங்களுடைய பான் அட்டையில் உங்களின் பெயர் எவ்வாறு Print ஆக வேண்டுமோ அதை அப்படியே டைப் செய்யவும்.

Step 10: Have you been known by other name என்ற இடத்தில் No என்பதை தேர்வு செய்யவும். பிறகு Gender, Date of Birth போன்றவற்றை நிரப்பவும்.

Step 11: Address for Communication என்பதில் Residence என்று தேர்வு செய்து Residence State இல் Tamilnadu என்று Select செய்க.

Step 12: உங்களின் Aadhaar Number ஐ சரியாக உள்ளிட்டு, உங்களின் பெயர் ஆதார் கார்டில் உள்ளதை போன்று Type செய்யவும்.

பிறகு Next Step என்பதை அழுத்தவும்.

Document Details

Step 13: இந்த பக்கத்தில் Identity Proof, Address Proof மற்றும் Date of Birth Proof போன்றவற்றிக்கு எந்த ஆவணங்களை வழங்குகிறீர்களோ அவற்றை தேர்வு செய்யவும்.

இங்கு நான் அனைத்திற்கும் ஆதார் என்று தேர்வு செய்துள்ளேன்.

தேர்வு செய்த பிறகு Next Step என்பதை 'கிளிக்' செய்யவும்.

Contact & Parent Details

Step 14: Telephone ISD Code இல் India என்பதை தேர்வு செய்யவும். பிறகு உங்களின் Mobile Number மற்றும் Email ID யை Enter செய்யவும்.

Step 15: No என்பதை 'டிக்' செய்து Father Name ஐ டைப் செய்யவும். Select the name of either father or mother which you may like to be printed on PAN Card என்பதில் Father Name என்பதை தேர்வு செய்க.

பிறகு Next Step என்பதை அழுத்தவும்.

Address Details

Step 16: Residential Address என்பதில் உங்களின் ஆதார் கார்டில் உள்ளது போன்ற முழு முகவரியையும் Enter செய்க.

Source of Income இல் உங்களின் வருவாய் ஆதாரத்தை 'டிக்' செய்யவும்.

'டிக்' செய்த பிறகு Next Step ஐ அழுத்தவும்.

Other Details

Step 17: உங்களுக்கான AO Code ஐ நிரப்பவும். AO Code உங்களுக்கு தெரியவில்லை என்றால், Get AO Details என்பதை 'கிளிக்' செய்யவும்.

இப்போது ஒரு Pap Up திரையில் பரிந்துரைக்கப்பட்ட AO Code வரும். அதில் Ok என்ற பட்டனை அழுத்தினால் தானாகவே நிரப்பிக்கொள்ளும்.

Himself/Herself என்பதை தேர்வு செய்து Verification Place என்ற இடத்தில் உங்கள் ஊரின் பெயரை நிரப்பவும்.

அனைத்தும் நிரப்பிய பின்பு Next Step ஐ அழுத்தவும்.

Documents Upload

Step 18: இந்த பக்கத்தில் நீங்கள் எந்த ஆவணத்தையும் பதிவேற்றம் செய்ய தேவையில்லை. ஏனெனில் நாம் ஆவணங்களை தபால் மூலமாக தான் அனுப்ப போகிறோம்.

பிறகு கடைசியாக Submit என்பதை கிளிக் செய்யவும்.

Payment For PAN Application

Step 19: பான் அட்டை விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்த Make Payment என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது Payment Gateway பக்கத்திற்கு Redirect ஆகும்.

Read How to Change Photo in PAN Card

Step 20: இதில் PayU மற்றும் Bill Desk என்ற இரண்டு வகையான Payment Gateway க்கள் இருக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.

நான் இங்கு PayU என்பதை தேர்வு செய்துள்ளேன். பிறகு Confirm Payment என்பதை அழுத்தவும்.

Step 21: இப்பொழுது பணத்தை செலுத்துவதற்காக ATM Card, Net Banking, UPI, Google Pay போன்ற Option கள் இருக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.

இங்கு ATM Card என்ற Option ஐ தேர்வு செய்யலாம்.

Step 22: இதில் உங்களின் ATM Card இல் அச்சடிக்கப்பட்டிருக்கும் 16 இலக்க நம்பர், Expiry Date, CVV Number (ATM இன் பின் புறத்தில் 3 இலக்க எண் இருக்கும்) மற்றும் ATM அட்டையின் மேல் உள்ள உங்களின் பெயர் போன்றவற்றை Enter செய்து Proceed என்பதை அழுத்தவும்.

Step 23: இப்பொழுது உங்களின் வங்கியில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை உள்ளிட்டு Complete Payment என்பதை அழுத்தவும்.

தற்போது பான் விண்ணப்பத்திற்கான கட்டணம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருக்கும். கட்டணத்தை செலுத்திய பிறகு வேறொரு பக்கத்திற்கு Redirect ஆகும்.

PAN Card படிவத்தை Download செய்தல்

இப்பொழுது நீங்கள் ஆன்லைனில் வெற்றிகரமாக Apply செய்துவிட்டீர்கள். இருப்பினும் உங்களின் வேலை முழுமையாக முடியவில்லை.

ஒருவேளை நீங்கள் விண்ணப்பிக்கும் போது ஏதாவது தவறாக உள்ளிட்டிருந்தால், இந்த பக்கத்தில் உள்ள Edit என்பதை கிளிக் செய்து அதை திருத்தம் செய்துகொள்ளலாம். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் Edit என்பதை கிளிக் செய்ய தேவையில்லை.

Step 24: Download PDF Form என்பதை கிளிக் செய்தவுடன் நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த Form 49A Download ஆகும்.

Step 25: இப்பொழுது நீங்கள் திரையில் காணும் பணம் செலுத்தியதற்கான PAN Application Acknowledgment Receipt ஐயும் Print எடுக்க வேண்டும். அதில் உள்ள Print என்பதை கிளிக் செய்து Print எடுத்துக்கொள்ளலாம்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 March 2024 7:19 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!