/* */

கொசு ஒழிப்பில் தீவிரம் காட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Mosquito Control - பருவ மழை பெய்து வருவதால், தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கொசு ஒழிப்பில் தீவிரம் காட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
X

தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Mosquito Control - மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கை: தென்மேற்கு பருவ மழை யெ்வதால், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், மாவட்ட சுகாதார இயக்குநரகத்துக்கு தகவல் அளிப்பதை உறுதிபடுத்த வேண்டும். பிற மாவட்டங்கள் அல்லது அண்டை மாநிலங்களில் டெங்கு பரவல் அதிகமாக இருந்தால், அதுகுறித்த விவரங்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநருக்கு அனுப்ப வேண்டும்.

வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லுாரிகள், பொது இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்காதவகையில் கழிவுகளை அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், உணவுப் பொருட்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்தல், தனி நபர் சுகாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, கூறியுள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 9:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  3. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...
  4. லைஃப்ஸ்டைல்
    முதல் ஆண்டு திருமண நாள்: இனிய வாழ்த்துகளும், ஊக்கமளிக்கும்...
  5. கோவை மாநகர்
    வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கோவை வ.உ.சி பூங்கா புள்ளி மான்கள்
  6. வீடியோ
    Vijay கட்சியை பற்றி Vetrimaaran கருத்து !#vijay #actorvijay...
  7. வீடியோ
    Viduthalai 2 படத்தின் Update கொடுத்த Vetrimaaran ! #vetrimaaran...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  9. திருவள்ளூர்
    அன்னபூர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
  10. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...