/* */

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்கு செல்கிறீர்களா? இதனை முதலில் படியுங்கள்

Kulasai Mutharamman Kovil-குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்கு செல்வதென்றால் எந்த வழியாக செல்வது என அறிய முதலில் இதனை படியுங்கள்.

HIGHLIGHTS

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்கு செல்கிறீர்களா? இதனை முதலில் படியுங்கள்
X

குலசை அருள்மிகு முத்தாரம்மனுடன் ஞானமூர்த்தீஸ்வரர்.

Kulasai Mutharamman Kovil-தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் உள்ள கடற்கரையோர நகரம் குலசேகரப்பட்டினம். பாண்டிய நாட்டின் குலசேகர பாண்டியன் மன்னன் ஆண்ட இந்த பூமி பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மிக முக்கியமான ஒரு துறைமுக நகரமாக விளங்கியது.

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள். தற்போது இங்கு அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியாவின் மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி மற்றும் தசரா திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது.


அது முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இங்கு அன்னை பராசக்தியுடன் அதாவது முத்தாரம்மன்னுடன் இறைவன் ஞானமூர்த்தீஸ்வரர் ஆக அமர்ந்து அருள் பாலிப்பது கூடுதல் சிறப்பாகும். சிவனும் பார்வதியும் ஒரே இடத்தில் அமர்ந்து அருள் பாதிப்பது இந்த ஒரு ஸ்தலத்தில் மட்டுமே. இத்தகைய சிறப்புக்குரிய முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் காப்பு கட்டிய பக்தர்கள் காளி. ராஜா ராணி, போலீஸ், குறவன் ,குறத்தி, அனுமன் உள்பட பல்வேறு வேடங்கள் அணிந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.


விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை இரவு 10 மணிக்கு குலசேகரப்பட்டினம் கடற்கரை ஓரம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சென்னை குறிப்பாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிவது உண்டு. இதன் காரணமாக உடன்குடி, திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டினம் நகரங்கள் மக்கள் கடலில் சிக்கித் தவிக்கும்.

இதன் காரணமாக பக்தர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்வதற்காகவும், வெளியூர் பக்தர்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதற்காகவும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பாலாஜி சரவணன் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-


குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு நடைபெறும் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 26.09.2022 முதல் 05.10.2022 வரை நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு 04.10.2022 முதல் 06.10.2022 ஆகிய மூன்று நாட்கள் பக்தர்களின் பாதுகாப்பையும் வசதியையும் கருத்தில் கொண்டு கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் உட்பட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

1. அனைத்து வாகனங்களும் அந்ததந்த பகுதியில் இருந்து வரும் தடத்தை பொருத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒருவழிப்பாதையாக தான் கோவிலுக்கு வரவும், அதே போல் ஏற்பாடுகள் செய்துள்ள ஒரு வழிப்பாதையாக தான் திரும்பி செல்ல வேண்டும்.

2. தூத்துக்குடி - திருநெல்வேலி மார்க்கத்திலிருந்து திருச்செந்தூர் வழியாக குலசேகரன்பட்டினம் செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் திருச்செந்தூர் இரும்பு ஆர்ச், மேலரத வீதி, முருகாமடம் சந்திப்பு வழியாக ஆலந்தலை கல்லாமொழி வழியாக குலசேகரன்பட்டினம் கார்த்திகேயன் காம்பளக்ஸ் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு அதே வழித்தடம் வழியாக முருகாமடம் வந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வந்து திருச்செந்தூர் பேருந்து நிலையம் வழியாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப இதில் சில மாறுதல்கள் செய்யப்படும்.

3. திசையன்விளை - தட்டார்மடம் - சாத்தான்குளம் மார்க்கத்தில் இருந்து வரும் அரசு பேருந்துகள் தேரியூர், தேரியூர் ஊருக்குள் வந்து கூழையன்குண்டு விலக்கு வழியாக சத்தியமூர்த்தி பஜார் ஜங்சன், உடன்குடி பேருந்து நிலையம், வில்லிக்குடியிருப்பு சந்திப்பு, குலசை பைபாஸ் சந்திப்பு அருகில் சாலையின் வடக்கு பக்கம் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும்.

4. கன்னியாகுமரி - உவரி மார்க்கமாக வரும் அரசு பேருந்துகள் குலசை ECR சாலையில் உள்ள தீதத்தாபுரம் சந்திப்பு அருகே ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும்.

5. தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக வரும் தனியார் வாகனங்கள் திருச்செந்தூர் இரும்பு ஆர்ச், மேலரத வீதி, முருகாமடம் சந்திப்பு வழியாக பரமன்குறிச்சி தைக்காவூர், சிதம்பரத்தெரு சந்திப்பு, ஆர்.எஸ்.யூ சந்திப்பு உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு வழியாக குலசை ரோடு தருவைகுளம் சந்திப்பு வரை வந்து தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்தி திரும்பி செல்ல குலசை தருவை ரோடு வழியாக திருச்செந்தூர் ECR சாலையில் வந்து முருகாமடம் சந்திப்பு அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள ரோடு வழியாக வந்து திருநெல்வேலி ரோட்டில் ஏறி, திருநெல்வேலி ரோட்டில் இராணிமகராஜபுரம், அடைக்கலாபுரம் அல்லது சண்முகபுரம் இரயில்வே கேட் அல்லது நல்லூர் விலக்கு வழியாக டி.சி.டபிள்யூ சந்திப்பு வந்தடைந்து தூத்துக்குடி செல்ல வேண்டும்.

6. திசையன்விளை, தட்டார்மடம், வழியாக வரும் தனியார் வாகனங்கள் காந்திநகர், படுக்கபத்து காமராஜர் சிலை, எள்ளுவிளை சந்திப்பு , பெரியதாழை ECR சாலை வழியாக மணப்பாடு பாலம் கடந்து பிரியா கேஸ் குடோன் அருகே தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு பின்னர் கொட்டங்காடு சாலை வழியாக நேராக படுக்கபத்து சென்று அங்கிருந்து தட்டார்மடம் , திசையன்விளை ரோடு வழியாக செல்ல வேண்டும்.

7. திசையன்விளை, மற்றும் சாத்தான்குளம், மணிநகர் பாலம் வழியாக வரும் தனியார் வாகனங்கள் ராமசாமிதர்மபுரம் விலக்கு, கந்தபுரம் விலக்கு, முன்று பனை சந்திப்பு, தீதத்தாபுரம் சந்திப்பு வழியாக பிரியா கேஸ் குடோன் அருகே உள்ள தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு பின்னர் கொட்டங்காடு சாலை வழியாக நேராக படுக்கபத்து சென்று அங்கிருந்து தட்டார்மடம், திசையன்விளை ரோடு வழியாக செல்ல வேண்டும்.

8. சாத்தான்குளம் மார்க்கமாக வரும் தனியார் வாகனங்கள் வேப்பங்காடு, ஆத்திக்காடு, வழியாக ராமகிருஷ்ணா பள்ளி சந்திப்பு, தேரியூர் சந்திப்பு கூழையன்குண்டு சந்திப்பு சத்தியமூர்த்தி பஜார் சந்திப்பு உடன்குடி பேருந்து நிலையம், வில்லிக்குடியிருப்பு சந்திப்பு வழியாக குலசை தருவைகுளம் வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு பின்னர் கொட்டங்காடு சாலை வழியாக நேராக படுக்கபத்து சென்று அங்கிருந்து சாத்தான்குளம், தட்டார்மடம், திசையன்விளை, வள்ளியூர் செல்ல வேண்டும்.

9. கன்னியாகுமரி மார்க்கத்திலிருந்து வரும் தனியார் வாகனங்கள் மணப்பாடு சோதனைச்சாவடி அடுத்து பிரியா கேஸ் குடோன் பின்புறம் உள்ள மற்றும் அருகில் உள்ள தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்தி அதே மார்க்கத்தில் மணப்பாடு வழியாக கன்னியாகுமரி செல்ல வேண்டும்.

10. திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கத்திலிருந்து வரும் தனியார் வாகனங்கள் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரிக்கு அடுத்த காந்திபுரம் விலக்கு வழியாக காயாமொழி வந்து பரமன்குறிச்சி உடன்குடி பேருந்து நிலையம், வில்லிக்குடியிருப்பு சந்திப்பு வழியாக குலசை ரோடு தருவைகுளம் சந்திப்பு தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு பின்னர் திருச்செந்தூர் ECR சாலை வந்து முருகா மடம் சந்திப்பு, அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும்.

11. குலசை கடலோர காவல் சோதனை சாவடி செட்டியாபத்து ரோடு கூழையன்குண்டு விலக்கு மற்றும் சல்மா பள்ளி உடன்குடி ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களுடன் தற்காலிக காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணித்தும் திறந்த வாகனங்கள் அசாதாரண சூழலில் ஆட்களையோ - பக்தர்களையோ ஏற்றி வந்தால் அந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது சட்டபடியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

12. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்ற உலோத்திலான எந்த பொருட்களையும் கொண்டு வருவதோ ஜாதி சின்னங்களுடன் கொடியோ, உடைகளோ, தொப்பி, ரிப்பன்கள் ஆகியவற்றை அணிந்து வரவோ காவல்துறையினரை போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ, அறுவறுக்க தக்க வகையில் நடந்து கொண்டாலோ நடனம் ஆடினாலோ அதிக சத்தத்துடன் டிரம்ஸ் அடித்து ஒலி எழுப்பி சுற்று சூழலுக்கு பங்கம் ஏற்படுத்தினாலோ, ஜாதி சம்பந்தமான கோஷங்கள் மற்றும் இசை ஏற்படுத்தவோ அனுமதியில்லை. என்பதை தெரிவித்து கொள்வதுடன் மீறினால் சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

13. கோவில் மற்றும் கோவில் சுற்றியுள்ள பகுதியில் கடற்கரை வாகன நிறுத்தங்கள் சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களில் மறைவாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவைகளின் மூலம் பக்தர்கள் வடிவில் வரும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் நடவடிக்கைகளை கண்காணிப்பு கேமரா மூலம் பார்வையிட்டு தேவைப்பட்டால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

14. பாதுகாப்பு மற்றும் திருட்டு நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வர கடற்கரை வாகன நிறுத்தங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டதுடன் இந்த வருடம் மக்கள் வாகனங்களில் இருந்து இறங்கி குழுக்களாக கடற்கரை சென்று கோவில் வந்து திரும்பி அவரவர் வாகனங்களில் செல்லும் இடம் வரை காவலர்கள் கண்காணிக்கும் விதமாக சீருடை மற்றும் சாதராண உடைகள் அணிந்த பெண் மற்றும் ஆண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

15. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அல்லது இதர சிறு வியாபாரிகள் உரிய அனுமதியின்றி சாலையோர சட்டவிரோதமாக கடைகள் அமைப்பதோ வேறுவிதமாக போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக வாகனங்கள் தேக்க தன்மையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

16. காவல்துறை முன் அனுமதியின்றி திருவிழா சம்பந்தமாக கோவில் பகுதிகள் மற்றும் எந்த தனியார் அல்லது பொது இடத்திலும் ஒலி பெருக்கி பயன்படுத்தவோ ஆடல் பாடல் போன்ற இசை நிகழ்ச்சிகளோ எவ்வித கலைநிகழ்ச்சிகள் நடத்தவோ, இராட்டினங்கள் அமைத்து தொழில் செய்யவோ எவருக்கும் அனுமதியில்லை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

17. பக்தர்களை ஏற்றி வரும் தனியார் வாகன ஒட்டிகள் தற்காலிக வாகன நிறுத்தத்தில் ஏனோ தானோ என்று வாகனத்தை நிறுத்தாமலும் வாகனத்தை சுற்றி கொட்டகை அமைக்காமலும் ஒழுங்காக நிறுத்தி மற்ற வாகனங்கள் வந்து செல்ல இடமளித்து நிறுத்த வேண்டும். காவல்துறை உத்தரவுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

18. பக்தர்களை ஏற்றிவரும் தனியார் வாகன ஒட்டிகள் அந்ததந்த பகுதியிலிருந்து வரும் தனியார் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனியார் வாகன நிறுத்தங்களில் நிறுத்தாமல் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக கோவில் வளாகம் மற்றும் மற்ற பகுதிகளில் சாலை ஒரங்களில் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

19. பக்தர்கள் தசரா குழுக்களாக வந்து முக்கிய சந்திப்புகளை கடக்கும் போது அவ்விடத்தில் அதிக நேரத்தில் நிறுத்தி கொண்டு வாண வேடிக்கைகள் நடத்தவோ, நன்கொடை பெறவோ இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டோ மற்ற பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

20. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு வழிப்பாதையாக உடன்குடி குலசை பைபாஸ் சந்திப்பு அருகில் உள்ள இரத்தினகாளியம்மன் கோவில் எதிரே திருவருள்பள்ளி தெரு வழியாக காவலர் குடியிருப்பு அரசு ஆரம்ப சுகாதார மையம் வழியாக கோவில் முன்பகுதி வந்து கடற்கரைக்கு செல்லவோ, தரிசனத்திற்கு செல்லவோ வேண்டும்.

21. கோவிலுக்கு வரும் தசரா குழுக்கள் ஒரு வழிப்பாதையாக உடன்குடி குலசை பைபாஸ் கருங்காளியம்மன் கோவில் சந்திப்பு வழியாக தாயம்மாள் பள்ளி சந்திப்பு வழியாக நேராக கோவில் முன்பகுதி மடப்பள்ளி வந்து கடற்கரைக்கு செல்ல வேண்டும்.

22. கோவில் தரிசனம் முடிந்து வருபவர்கள் கோவில் மேற்குபக்க வாசல் (ஆர்ச்) வழியாக வெளியே வந்து காவல்நிலையம் முன்பு வந்து நேராக குலசை To உடன்குடி பைபாஸ் சந்திப்பு வந்து தங்கள் வாகன நிறுத்தங்களுக்கு செல்ல வேண்டும்.

23. கடற்கரையில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் ஒருவழிப்பாதையாக சிதம்பரஸ்வரர் கோவில் தெரு, கச்சேரி தெரு வழியாக காவல் நிலையம் முன்பு வந்து உடன்குடி பைபாஸ் சந்திப்பு செல்ல வேண்டும்.

24. பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டி தசரா குழு பக்தர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கோவிலில் காப்பு கயிறுகளை அவிழ்த்து கொள்ளலாம்.

25. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை W.P(MD)22591/2022 பிராகரம் கோவில் வளாகத்தில் எந்தவித ஆடல் பாடல் நிகழ்ச்சிகளோ, ஆபாச நடனமோ நடத்தக் கூடாது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த திருவிழாவை முன்னிட்டு 6 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 22 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 83 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

காவல்துறையால் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலை மற்றும் நியாயமான தேவைகளுக்காகவும் பக்தர்களின் பொதுநலனுக்காகவும் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்களும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 April 2024 7:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  8. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  9. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  10. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...