/* */

கண்ணாடி பாட்டிலா அல்லது டெட்ரா பேக்கா?: அரசு விளக்களிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் அடைத்து விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு விளக்கம் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

கண்ணாடி பாட்டிலா அல்லது டெட்ரா பேக்கா?:  அரசு விளக்களிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
X

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்தனர்.

இன்று அந்த மனு மீதான விசாரணையின்போது நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் கூறுகையில், பெரும்பாலான உணவுப்பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உடலுக்கு தீங்கு என்பதை அறிந்தும் நாம் அதை வாங்கி உண்கிறோம். இது கவலையளிக்கக் கூடியது. பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்பனை செய்யப்படுவதை ஏன் தடுக்கக்கூடாது? அமுல், நெஸ்ட்லே போன்ற நிறுவனங்கள் டெட்ரா பேக்கில் பொருட்களை விற்பனை செய்வது போல ஆவின் நிறுவனமும் கண்ணாடி பாட்டிலில் அல்லது டெட்ரா பேக்கில் ஏன் விற்பனை செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்

அதற்கு, உடலுக்கு தீங்கு விளைவிப்பது என்றால் அதனை தடை செய்ய தயார் என்றும், இதுகுறித்த அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் கொடுக்குமாறு தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது சட்டத்தை முழுமையாக அமல்படுத்தவேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் அடைத்து விற்பனை செய்ய முடியுமா என்று தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Updated On: 12 Aug 2022 1:33 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  3. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  4. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  6. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  7. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  8. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  9. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  10. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?