/* */

+1, +2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் ஹால்டிக்கெட் வெளியீடு

மார்ச் 3-ஆம் தேதி முதல் http://www.dge1.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

+1, +2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் ஹால்டிக்கெட் வெளியீடு
X

பைல் படம்.

மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 17.30 லட்சம் பள்ளி மாணவர்கள் எழுத உள்ளனர். இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக, பள்ளி தலைமையாசிரியர்கள் வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி அன்று பிற்பகல் முதல் http://www.dge1.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று “online-portal” என்ற வாசகத்தினை “Click” செய்து “HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH/APRIL 2023″ என தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுக்களை (Hall Tickets) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திட வேண்டும் எனவும், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மார்ச் 13- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடக்கும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வினை தமிழ்நாட்டில் 3169 தேர்வு மையங்களில் 7600 பள்ளிகளைச் சேர்ந்த 8.80 லட்சம் பள்ளி மாணவர்களும், மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடக்க இருக்கின்ற மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வினை தமிழ்நாட்டில் 8.50 லட்சம் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 17.30 லட்சம் மாணவர்கள் எழுத இருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 March 2023 2:15 PM GMT

Related News