/* */

ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

Gold Price Hike News -ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கி கொண்டிருக்கிறது.

HIGHLIGHTS

ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
X

Gold Price Hike News -தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்வதற்கு முக்கிய காரணம் ஒரு நாட்டு பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை அந்த நாட்டில் தங்கம் எவ்வளவு கையிருப்பில் இருக்கிறதோ அதை பொறுத்தும் அதனுடைய அந்நிய செலாவணி மதிப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரம் நிலையும் இருக்கும்.

அந்த வகையில் ஏறிய தங்கத்தின் விலை குறைந்ததாக வரலாறே கிடையாது. அப்படியே குறைந்தாலும் பவுனுக்கு ஆயிரம் முதல் 2000 வரை இறங்கும். கிராமிற்கு 50 முதல் 100 ரூபாய் வரை இறங்கும். பழையபடி மீண்டும் ஏறிவிடும். இப்படித்தான் இந்தியாவில் இதுவரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை தங்கத்தின் விலை கட்டுப்பாட்டில் இருந்தது ஒரே ஒரு முறை தான் .அது எப்போது என்றால் ஜனதா ஆட்சியில் மொரார்ஜி தேசாய் இந்திய பிரதமராக இருந்தபோது மட்டும் தங்கத்தின் விலை குறைந்து கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்தது. அதன் பின்னர் வந்த எந்த பிரதமராலும் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை. தங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பது மட்டுமல்ல சர்வதேச அளவில் பணப்பரிவர்த்தனைக்கும் தங்கம் தான் ஒரு முக்கிய அளவுகோலாக இருக்கிறது.

134 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு அதிகம் என்பதால் குறிப்பாக பெண்கள் விரும்பி அணியும் அணிகலன்கள் அனைத்தும் தங்கத்தில் செய்யப்படுவதால் இந்தியாவில் தங்கம் விலை எப்பொழுதும் இறக்கை கட்டி பறந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின்னர் கொஞ்சம் படிப்படியாக குறைந்து ஒரு 35 ஆயிரம் 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து கொண்டே வருகிறது. இடையில் சில நாட்கள் குறைந்து இருந்தாலும் பெரும்பாலும் விலை ஏற்றத்தில் தான் இருந்துள்ளது.

நேற்று முன்தினம் தங்கத்தின் விலை திடீரென ஒரு கிராம் ரூ 4 ஆயிரத்து 491 ஆகவும், ஒரு பவுன் 39 ஆயிரத்து 208 ஆகவும் விற்பனையானது. நேற்று மாலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ. 39ம் பவுனுக்கு ரூ. 312 ம்உயர்ந்து ஒரு கிராம் ஒரு 4 ஆயிரத்து 940க்கும் ஒரு பவுன்ரூ. 39 ஆயிரத்து 520க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து நேற்று வரை தங்கம் கிராமுக்கு ரூ.210 -ம் பவுனுக்கு ரூ.1,680 -ம் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நிலையில் தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்தால் இம்மாத இறுதிக்குள் ஒரு கிராம் ரூ.5,000 ஐதொட்டுவிடும். அதன் அடிப்படையில் ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை தாண்டி விடும் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Nov 2022 9:56 AM GMT

Related News