சமாதி மனநிலையில் நித்தியானந்தா! உயிரிழந்ததாக கூறுவது உண்மையா?

பிரபல சர்ச்சை சாமியார் நித்யானந்தா காலமாகிவிட்டதாக, சமூக வலைதளங்களில் பரபரப்பு தகவல் வெளியான நிலையில், அவரது தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சமாதி மனநிலையில் நித்தியானந்தா! உயிரிழந்ததாக கூறுவது உண்மையா?
X
சாமியார் நித்தியானந்தா 

திருவண்ணாமலையை சேர்ந்த பிரபல சாமியார் நித்யானந்தாவை சுற்றி, எப்போதும் சர்ச்சைகள் வலம் வருகின்றன. பாலியல் புகார், மோசடி உள்ளிட்ட புகார் உள்ளிட்ட வழக்குகள் அவரை பின் தொடர்ந்தன.

கைலாசா தனி நாடு

இதையடுத்து, இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா, தென்பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு ஒன்றில் அடைக்கலம் புகுந்ததாகவும், அந்த தீவினை அவர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அதை கைலாசா நாடு என்று அறிவித்துக் கொண்ட அவர், தனிக்கொடி, தனி கரன்சி என்று அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த தீவில் இருந்தபடி, தினந்தோறும் சமூக வலைதளங்கள் மூலமாக சொற்பொழிவு ஆற்றி வந்தார் நித்தியானந்தா.

இந்த நிலையில், நித்யானந்தாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார் எனவும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின. அதேபோல், நித்தியானந்தா பேசும் வீடியோ எதுவும் வெளியாகாமல் இருந்ததால், அவரது பக்தர்கள் பலருக்கும் சந்தேகம் வலுத்தது.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு

ஆனால், இந்த தகவல்களை நித்தியானந்தா தரப்பில் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இது குறித்து நித்யானந்தா எழுதியதாக காட்டப்படும் கடிதத்தில், "நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" என்று வாசகம் உள்ள புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அதே நேரம், எப்போதும் வீடியோ வெளியிட்டு பேசும் நித்யானந்தா, இப்போது மட்டும் ஏன் கடிதம் எழுதி இருக்கிறார் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கும் நித்தியானந்தா தரப்பில் பதில் தரப்பட்டுள்ளது.

 நித்தியானந்தா எழுதியதாக கூறப்படும் கடிதம்.

அதில், தனக்கு இன்னும் சரியான சாப்பாடு சரியான தூக்கம் இன்னும் இல்லை என்பதால், வீடியோ வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


'சமாதி மனநிலையில் உள்ளேன்'

தனக்கு, 27 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என்றும் நித்யானந்தா கூறியுள்ளார்.

நித்யானந்தாவே தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்திருப்பதும், சமாதி மனநிலையில் இருப்பதாக அவர் கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 2022-05-12T17:20:21+05:30

Related News

Latest News

 1. விழுப்புரம்
  விழுப்புரத்தில் மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
 2. தேனி
  கம்பத்தில் டூவீலர் நிலை தடுமாறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு
 3. காஞ்சிபுரம்
  குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் காஞ்சிபுரம் மாவட்ட...
 4. இந்தியா
  உதய்பூர் கொலைகாரனுக்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பு இல்லை: ஐ.டி. பிரிவு...
 5. தேனி
  தேனி என்.எஸ்., கல்லுாரியில் 'கல்லுாரி கனவு' திட்ட முகாம்
 6. பாளையங்கோட்டை
  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 96வது பட்டமளிப்பு விழா
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் கடந்த 26 நாட்களில் மட்டும் 204 பேருக்கு கொரோனா...
 8. தேனி
  ஆண்டிபட்டியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து: விவசாயி பலி
 9. தேனி
  கஞ்சா விற்ற இரு வியாபாரிகள் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது
 10. அரியலூர்
  குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைப்பு