/* */

சென்னை ஐஐடி.,யில் கட்டணமில்லா இணையவழி கணிதப் பாடவகுப்பு

சென்னை ஐஐடி.,யில் கட்டணமில்லா இணையவழி கணிதப் பாடவகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சென்னை ஐஐடி.,யில் கட்டணமில்லா இணையவழி கணிதப் பாடவகுப்பு
X

பைல் படம்.

புதிய கண்டுபிடிப்பு சிந்தனையை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் (ஐஐடி) 3 மற்றும் 4-ம் நிலை கணிதப் பாட வகுப்புகளை தொடங்கவுள்ளது.

சென்னை ஐஐடி ப்ரவர்த்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை மூலம் கட்டணமில்லாமல் இணையவழி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இறுதித் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் உள்ள மையங்களில் நடத்தப்படும். இந்த வகுப்புகள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் நடத்தப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் https://pravartak.org.in/oobtregistration_math என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்துகொள்ளவேண்டும். 3-ம் மற்றும் 4-ம் நிலைகளுக்கான பதிவுகளுக்கு 2023, மே 7-ந் தேதி கடைசி நாளாகும்.

தேசிய தொழில்நுட்ப மையம் திறப்பு

சென்னை ஐஐடி வளாகத்தில் துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் கடற்கரைக்களுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் திறக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் வரவேற்றுள்ளார்.

சென்னை ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் கடற்கரைக்களுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தை (என்டிசிபிடபிள்யூசி) மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்துவைத்தார்.

சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.77 கோடி ரூபாய் செலவில் இந்த என்டிசிபிடபிள்யூசி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், அறிவியல் சார்ந்த ஆதரவு, உள்ளூர், மண்டலம், தேசியம் மற்றும் சர்வதேச அளவிலான கல்வி, ஆராய்ச்சி மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கான தீர்வுகளை அளிக்கும்.

இதுகுறித்து பிரதமர் தமது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிலில், "சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள என்டிசிபிடபிள்யூசி, இந்தியாவின் கடல்சார் துறையின் மேம்பாட்டிற்கு வலிமைசேர்க்கும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 April 2023 2:20 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்