/* */

இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்தும் ஃபோர்டு மோட்டார்

2 பில்லியன் டாலர் இழப்புக்குப் பிறகு இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை மூடப்போவதாக ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்தும் ஃபோர்டு மோட்டார்
X

சென்னையில் உள்ள போர்டு ஆலை 

கடந்த 10 வருடங்களில் இழப்புகள் மற்றும் வளர்ச்சியின்மை காரணமாக ஃபோர்டு மோட்டார் கம்பெனி சனந்த் மற்றும் சென்னையில் உள்ள ஆலைகளை மூடுவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையால் குறைந்தது 4,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அமெரிக்க வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனம் செப்டம்பர் 9 அன்று இந்தியாவில் உற்பத்தி செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டுவரவும், சனந்த் மற்றும் சென்னையில் உள்ள தொழிற்சாலைகளை மூடப்போவதாகவும் கூறியது.

ஃபோர்டு 2021ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் குஜராத் சனந்த் மற்றும் 2022ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சென்னையில் வாகனங்கள் மற்றும் இயந்திரங்களின் உற்பத்தியை நிறுத்திவிடும் என்று ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், 2017 ல் இந்தியாவில் கார்களை விற்பதை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது

Updated On: 10 Sep 2021 9:20 AM GMT

Related News