/* */

அந்தியூர் அருகே குடிநீர் வேண்டி பெண்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

அந்தியூர் அருகே குடிநீர் வேண்டி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே குடிநீர் வேண்டி பெண்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போலீசார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சொக்கநாதமலையூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் ஆண்கள் பெண்கள், வெள்ளித்திருப்பூர்_ பவானி மெயின் ரோட்டில் சொக்கநாதமலையூர் என்ற இடத்தில் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த வெள்ளித்திருப்பூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள்கள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வெள்ளித்திருப்பூர் - பவானி மெயின் ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 19 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?