/* */

அந்தியூரில் பட்டுச்சேலைகள் வாங்கி ரூ.90 லட்சம் மோசடி செய்த பெண்

அந்தியூரில் கைத்தறி நெசவாளர்களிடம் பட்டுச்சேலை வாங்கி ரூ.90 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூரில் பட்டுச்சேலைகள் வாங்கி ரூ.90 லட்சம் மோசடி செய்த பெண்
X

பட்டுச்சேலை மோசடியில் ஈடுபட்ட  சுஜாதாவை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூரில் கைத்தறி நெசவாளர்களிடம் பட்டு சேலை வாங்கிக் கொண்டு பணம் தராமல் ரூ.90 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகவதிஅம்மன்கோயில் வீதியைச் சேர்ந்தவர் நந்தகோபால் மகன் லட்சுமணன் (வயது 45). கடந்த 25 ஆண்டுகளாக கைத்தறி பட்டுச்சேலை நெசவு செய்து ஜவுளிக் கடைகளுக்கு மொத்தமாக வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு கோவை மாவட்டம் சுங்கம் சின்னையா பிள்ளை வீதியில் வசிக்கும் கார்த்திகேயன் மனைவி சுஜாதா (42) மற்றும் சேலத்தைச் சேர்ந்த ரவி ஆகியோர் அந்தியூருக்கு வந்து லட்சுமணனிடம் அறிமுகம் செய்து கொண்டதோடு, தங்களுக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் விற்பனை செய்ய மொத்தமாக பட்டுச் சேலைகள் கொள்முதல் செய்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, அந்தியூரில் நெசவுத்தொழில் செய்யும் பலரும் சுஜாதாவுடன் பட்டு சேலை வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில், சென்னையில் துணிக்கடை நடத்தும் குமார், கோவையில் துணிக்கடை நடத்தும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்த சுஜாதா அவர்களுக்கும் பட்டு சேலைகள் கொடுக்கும்படி கூறியுள்ளார். இருவரும், வியாபாரத்துக்கு பட்டு சேலை வாங்கிச் சென்ற பின்னர், நெசவாளர்களுக்கு முறையாக பணம் தராமல் தாமதப்படுத்தி வந்தனர். இதுகுறித்து, பலமுறை தொடர்பு கொண்டு கேட்டும் பணம் தரவில்லை.

மேலும், அந்தியூரில் பட்டுச்சேலை விற்பனையில் ஈடுபட்ட பாண்டியம்மாள், முனுசாமி, சம்பத், சகுந்தலா, அன்பழகன், ராஜேந்திரன், எல்லப்பாளையம் சம்பத் ஆகியோரிடம் மொத்தம் சுமார் ரூ. 90 லட்சத்துக்கு மேல் பட்டு சேலை வாங்கிக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். எனவே, சுஜாதா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் பட்டு சேலை மோசடியில் ஈடுபட்ட சுஜாதா நேற்று கைது செய்யப்பட்டு பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 10 Jan 2023 8:05 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...