/* */

பவானிசாகர் அணையின் இன்றைய (ஆக.26) நீர்மட்ட நிலவரம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து இன்று (ஆக.26) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் இன்றைய (ஆக.26) நீர்மட்ட நிலவரம்
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து இன்று (ஆக.26) காலை 8 மணி நிலவரப்படி 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், அணைக்கு அவ்வப்போது அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் என மாறி மாறி வந்து கொண்டுள்ளது. தற்போதைய, நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 856 கன அடியாக உள்ளது.

இன்று (ஆகஸ்ட் 26) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 81.25 அடி ,

நீர் இருப்பு - 16.35 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 856 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 2,900 கன அடி ,

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு 500 கன அடி நீரும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்காலில் பாசனத்திற்கு 500 கன அடி நீரும், குடிநீருக்காக பவானி ஆற்றில் குடிநீருக்காக 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கன அடி நீரும் என மொத்தம் அணையில் இருந்து 2,900 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 26 Aug 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  5. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  6. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  7. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  8. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  10. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!