/* */

ஈரோட்டில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அக்.12ல் ஏலம்

Erode news- ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் அக்டோபர் 12ம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அக்.12ல் ஏலம்
X

Erode news- வாகனங்கள் ஏலம் (கோப்புப் படம்).

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் அக்டோபர் 12ம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4 நான்கு சக்கர வாகனம் மற்றும் 57 இரண்டு சக்கர வாகனங்கள், மொத்தம் 61 வாகனங்கள் ஆனைகல்பாளையத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் அக்டோபர் 12ம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

வாகனங்களை 11ம் தேதி மாலை காலை 10 மணி முதல் 5 மணி வரை நேரில் பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள், இரு சக்கர வாகனத்திற்கு ரூ.2 ஆயிரமும், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரமும் 12ம் தேதி காலை 7 மணி முதல் காலை 10 மணிக்குள் பொது ஏலம் நடத்தும் இடத்தில் முன்பணம் செலுத்தவேண்டும். முன் பணத்தொகை செலுத்துபவர் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி 18 சதவீதம் (ஜிஎஸ்டி) முழுவதையும் ஏலம் விடும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தினைப் பெற்றுக் கொள்ளவேண்டும். மேலும் விபரங்களுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, ஈரோடு அலுவலகத்தினை நேரடியாகவோ, 8523980906, 9585376421, 9498174688, 9976057118 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 Oct 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?