/* */

ஈரோட்டில் வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை (நேற்று) நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோட்டில் வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
X

வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை (நேற்று) நடைபெற்றது.

வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் ஈரோடு அருள் சித்தா கிளினிக் கூட்ட அரங்கத்தில் சனிக்கிழமை (நேற்று) நடைபெற்றது. முன்னதாக, அருட்பெருஞ்ஜோதி ஞானதீபம் பொருத்தப்பட்டு சன்மார்க்க கொடி கட்டும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து சமரச சுத்த சன்மார்க்க பேரணியும் நடைபெற்றது. இப்பேரணிக்கு வள்ளலார் வழித்தோன்றல் உமாபதி முன்னிலை வகித்தார். இதில், தலைமைச் சங்கத்தின் பொறுப்பாளர்கள், சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, ஐம்பெரும் விழாவிற்கு வடலூர் தலைமைச் சங்கத்தின் உடைய மாநிலத் தலைவர் மருத்துவர் அருள்நாகலிங்கம் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். மாநிலப் பொருளாளர் நஞ்சுண்டன், மாநில அமைப்புத் தலைவர் அருள் மற்றும் மாவட்டத்தின் தலைமைச் சங்கத் தலைவர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு வள்ளலார் 200 முப்பெரும் விழாவினை 52 வாரங்கள் தொடர் நிகழ்ச்சியாக தமிழ்நாடு எங்கும் ஆகச் சிறந்த முறையில் நடத்தி, அன்னதான திட்டம் நடத்த ஆணை பிறப்பித்து, வள்ளலார் சர்வதேச மையம் 100 கோடி ரூபாய் அளவில் அமைக்க முடிவு செய்ததற்காக, தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் முறையாக நன்றி தெரிவித்தும், வள்ளலார் 200 முப்பெரும் விழாவின் நிறைவு விழா வரும் 5ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. அந்த விழா சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் தலைமைச் சங்கம் நல்கும் என்று நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, வடலூர் தலைமைச் சங்கத்தின் உடைய மாநிலக் கூட்டம் முப்பெரும் விழாவாக (மாநில மாநாடு, சங்கத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழா, வள்ளலார் 200ஆவது ஆண்டு விழா) சென்னை மாநகரில் எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் நடைபெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தனி நபருக்கான சங்க ஆயுள் காப்பீட்டுத் திட்டம், சங்கம் சார்பில் நிறுவப்பட இருக்கும் புதிய சாலை சபைக்கு ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்பட்டது. சன்மார்க்க மன்றம் சார்பில் பள்ளி கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை தலைமைச் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

Updated On: 1 Oct 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...