/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை 433 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 433 மையங்களில், மாபெரும் தடுப்பூசி முகாம் நடக்கிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை 433 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்
X

பைல் படம்

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) 23-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 504 மையங்களில், நாளை காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை இந்த மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. நாளை மட்டும் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 1,732 பணியாளர்கள், 66 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.18 வயது நிரம்பிய இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கும் நாளை தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் 60 வயது உடைய இணை நோயுடைய முதியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.

Updated On: 4 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  2. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  4. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  6. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  7. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  8. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  9. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!