தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் திராவிட மாடல் அரசு: தமாகா இளைஞரணி தலைவர் கண்டனம்

தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் திராவிட மாடல் அரசு என தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் திராவிட மாடல் அரசு: தமாகா இளைஞரணி தலைவர் கண்டனம்
X

தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா (பைல் படம்).

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. மாணவர்கள், மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு முடிந்து அட்மிஷன் நடக்க உள்ள நிலையில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து வருகிறார்கள்.

கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு திமுக அரசு தான் காரணம். இந்த கல்லூரிகளில் உள்ள கைரேகை வழியான வருகைப்பதிவேடு, கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது மற்றும் சிசிடிவி சரியாக செயல்படாததுதான் இதற்கு காரணம் என தெரிகிறது. பார்ப்பதற்கு கட்டிடங்கள் அழகாக தோற்றமளித்தாலும் இருக்க வேண்டியவை இருக்க வேண்டும் அல்லவா?. கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி கடலுக்கு உள்ளே பேனா வைக்கவும், உலகத்தரத்திற்கு நிகராக சாலைகளை சீர் செய்யாமல் சீர் செய்ததாக கூறவும் தெரிந்த இந்த அரசுக்கு மாணவர்கள் கல்வி பயில தேவையான வசதியை செய்து தர தெரியவில்லையே?.

வாக்கு கேட்டு வரும்போது நீட் தேர்வு ரத்து என்ற எதிர்பார்ப்பில் ஒரு செங்கல்லை காண்பித்து வாக்கு கேட்டு வெற்றி பெற்ற கூட்டம் தானே நீங்கள் உங்களுக்கு எப்படி தெரியும் மாணவர்கள் எதிர்கால கல்வி பற்றி?. தமிழகத்தில் ஆட்சி திமுக சார்பில் நடைபெறும் போது மத்திய அரசை குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம். தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் அனைத்தும் சரியாக இருக்கா என்பதை சரிபார்க்க வேண்டியது மாநில அரசின் வேலையா மத்திய அரசின் வேலையா? எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

திராவிட மாடல் என்று கூறிக் கொள்ளும் இந்த அரசு சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தாத காரணத்தினால் தான் தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சுகாதாரத்துறை செயலிழந்து உள்ளது. தமிழக மருத்துவக் கல்லூரிகள் 550 சீட்டை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயோமெட்ரிக் வருகை பதிவேடு மற்றும் சிசிடிவி பொருத்துவது சாதாரண நடைமுறை தான். பணியிடங்கள் காலியாக உள்ளதை என்.எம்.எஸ்.க்கு மறைப்பதற்காக பயோமெட்ரிக் பயன்படுத்தவில்லை. சுகாதாரத்துறை செயல்பாடு இதேபோல் நீடித்தால் வரும் காலங்களில் பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நீங்கள் இந்த ஆட்சியில் எந்த ஒரு சாதனையையும் நிகழ்த்தப் போவதில்லை மாறாக கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த 11 மருத்துவக் கல்லூரிகளையாவது நிரந்தரமாக செயல்பட அனைத்து வகையான உள்கட்டமைப்புகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Updated On: 29 May 2023 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா