/* */

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,649 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1,649 கன அடியாக அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,649 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை (பைல் படம்).

தமிழ்நாட்டின் 2-வது பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி. அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றின் வழியாக தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் அதிக அளவு குறைந்து வருகிறது. இந்நிலையில் அணையிலிருந்து இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று (பிப்.4) காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 731 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று (பிப்.5) காலை நிலவரப்படி அணைக்கு வரும் நீர்வரத்து 1,649 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 98.70 அடியாகவும் , நீர் இருப்பு 27.72 டிஎம்சியாகவும் , நீர் வரத்து 1,649 கன அடியாக உள்ளது. கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1,000 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றில் 150 கன அடி என மொத்தம் 1,650 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

Updated On: 6 Feb 2023 6:29 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!