/* */

ஈரோடு காரை வாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில் நாக பஞ்சமி விழா

ஈரோடு காரை வாய்க்காலில் பிரசித்தி பெற்ற சுயம்பு நாகர் கோவிலில் நாக பஞ்சமி விழா திங்கட்கிழமை (நேற்று) நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு காரை வாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில் நாக பஞ்சமி விழா
X

நாக பஞ்சமி விழா ஈரோடு காரை வாய்க்காலில் நடைபெற்றது.

ஈரோடு காரை வாய்க்காலில் பிரசித்தி பெற்ற சுயம்பு நாகர் கோவிலில் நாக பஞ்சமி விழா திங்கட்கிழமை (நேற்று) நடைபெற்றது.

ஈரோடு காரை வாய்க்காலில் பிரசித்தி பெற்ற சுயம்பு நாகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நாக பஞ்சமி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, திங்கட்கிழமை (நேற்று) கோவிலில் நாக பஞ்சமி விழா நடந்தது. இதையொட்டி பிற்பகல் 3.30 மணிக்கு கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.


அதைத்தொடர்ந்து மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து நாகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆலய தலைவர் எம்.ஜெயபிரகாஷ் செயலாளர் வி.லட்சுமணன் பொருளாளர் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்

Updated On: 23 Aug 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்