/* */

கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் குண்டம் விழா

கோபி அருகே பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வரும் 12-ம் தேதி நடக்க உள்ளது.

HIGHLIGHTS

கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் குண்டம் விழா
X

குண்டத்துக்காக பக்தர்கள் அளித்த விறகுகள் கோயில் முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ளது. அடுத்த படத்தில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் உள்ளார். 

கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வரும் 12-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், குண்டத்துக்கான கரும்புகளை (விறகுகள்) பக்தர்கள் வழங்கி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பாரியூரில் கொண்டத்துக் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குண்டம் திருவிழா. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கினர். பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த மாதம் 29-ம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர்.


குண்டம் திருவிழாவையொட்டி, நேற்று மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நாளை (11-ம் தேதி) மாவிளக்கு பூஜையும், அம்மன் பூத வாகன காட்சியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, 12-ம் தேதி அதிகாலை தொடங்குகிறது. இதற்காக 50 அடி நீள குண்டம் தயார் செய்யப்படவுள்ளது. குண்டத்துக்கு தேவையான தொடர்ந்து, கரும்புகளை (விறகுகள்) பக்தர்கள் கடந்த சில நாட்களாக வழங்கி வருகின்றனர். அவை கோயில் முன்பாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்க வரிசையில் காத்திருக்கும் வகையில், தடுப்புகள் அமைக்கும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.


குண்டம் இறங்கும் நிகழ்வைத் தொடர்ந்து 13-ம் தேதி மாலை 4 மணி அளவில் தேர்த்திருவிழாவும், 14-ம் தேதி மலர் பல்லக்கு வீதி உலாவும் நடைபெற உள்ளது. அன்று இரவு 11 மணி அளவில் மலர் பல்லக்கில் அம்மன் புறப்பட்டு கோபி பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுவார். 15-ம் தேதி தெப்ப உற்சவமும், 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை மஞ்சள்நீர் உற்சவமும் நடக்கிறது. இதையடுத்து மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

Updated On: 10 Jan 2023 8:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?