/* */

ஈடிசியா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Erode news- ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (ஈடிசியா) 41வது பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈடிசியா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
X

Erode news- கூட்டத்தில் தலைவர் ஸ்ரீதர் பேசினார்.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (ஈடிசியா) 41வது பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (ஈடிசியா) 41வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈடிசியாவின் 2023-2025ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடந்தது.

தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் புதிய நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சங்கத்தின் தலைவர் திருமூர்த்தி கூட்டத்தை வழிநடத்த, அதனை தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவினர் பதவியேற்றுக் கொண்டனர்.

இதன்படி, ஈடிசியா சங்கத்தின் 2023-2025க்கான புதிய தலைவராக ஸ்ரீதர், துணை தலைவர்களாக கந்தசாமி, பழனிவேல், ராம் பிரகாஷ் ஆகியோரும், சங்கத்தின் செயலாளராக சுரேஷ், இணை செயலாளர்களாக பரத், கார்த்திகேயன் ஆகியோரும், பொருளாளராக சரவணபாபு, இணை பொருளாளராக ஷரத் மனோ ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

மேலும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக 34 பேர் பதவியேற்று கொண்டனர். இக்கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள், முன்னாள் சங்க நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Sep 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  2. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  3. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  5. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  6. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  7. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...
  8. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  9. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...