Begin typing your search above and press return to search.
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி தோன்றியுள்ளது
HIGHLIGHTS

தாமரைக்கரை பகுதியில் தோன்றிய திடீர் அருவி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக தினமும் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் மலைப்பகுதியில் உள்ள வன குட்டைகள் நிரம்பி வருகின்றன. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் தோன்றியுள்ளன.
இதனால், இந்த அருவியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.குறிப்பாக பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தாமரைக்கரை பகுதியில் 50 அடி உயரத்தில் இருந்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த எழில்மிகு காட்சியை அந்த வழியாக வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய செல்போனில் படம் பிடித்து சென்றனர்.