/* */

ஈரோடு மாவட்டத்தில், மானியத்தில் டூவீலர் வாகனம் பெற, உலமாக்கள் விண்ணப்பிக்க அழைப்பு

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில், வக்பு வாரிய நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க, மானியம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில், மானியத்தில் டூவீலர் வாகனம் பெற, உலமாக்கள் விண்ணப்பிக்க அழைப்பு
X

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் வக்பு வாரிய நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியினை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.எனவே, இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

ஈரோடு மாவட்டத்திலுள்ள வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும், தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல் வேண்டும், 18 வயதிலிருந்து 45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும், விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான (எல்எல்ஆர்) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், ஈரோடு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 35 வக்பு நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் 1)பேஷ் இமாம் 2) அரபி ஆசிரியர்கள், 3) மோதினார், 4) முஜாவர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் மானியத் தொகை வழங்கப்படும்.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமான சான்று, வயது சான்றிதழ், புகைப்படம். சாதி சான்று, மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநர் உரிமம்/எல்எல்ஆர், ஐஏப்எஸ்சி குறியீடுடன் கூடிய வங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று, மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல்/விலைப்புள்ளி ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

மேலும், மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்க தேவையான விவரங்கள் மற்றும் படிவத்தினை ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் படிவத்தினை நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் 9445477855 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 Aug 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  2. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  3. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  4. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  5. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  7. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  8. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்