சிவகிரி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

சிவகிரி அருகே தோட்டத்து கிணற்றில் விவசாயி தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகிரி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள காகம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லசிவம் (வயது 56) விவசாயி. இவர் நேற்று காலை சாணார்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் பொன் சங்கர் தந்தையை தேடி தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது கிணற்றுக்கு அருகில் நல்லசிவத்தின் செருப்பும், செல்போனும் இருந்தது.

இதனால், சந்தேகம் அடைந்த மகன் பொன் சங்கர் இதுகுறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும் கொடுமுடி தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத் திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி தேடியபோது, நல்லசிவம் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 Dec 2021 5:15 AM GMT

Related News