அந்தியூர் அருகே சாலை விபத்து: சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு

அந்தியூர் அருகே சின்னபருவாச்சியில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அந்தியூர் அருகே சாலை விபத்து: சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள சிந்தகவுண்டம்பாளையம் அடுத்த காட்டுபாளையம் ஏரி தோட்டத்தை சேர்ந்தவர் சொக்கப்பன். இவரது மகன் கார்த்தி ( 19). டிப்ளமோ படித்துள்ளார். இந்த நிலையில், கார்த்தி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அந்தியூர் அருகே உள்ள பாட்டப்பன் கோவிலுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சின்னபருவாச்சியில் அந்தியூர்-பவானி கடக்க முயன்றார்.

அப்போது, அந்தியூர் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் விபத்துக்குள்ளானது.இதில் படுகாயமடைந்த கார்த்தியை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் இந்த நிலை சிகிச்சை பலன் இன்றி இன்று காலை இறந்துவிட்டார் இதுகுறித்து, அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2022-06-28T09:23:23+05:30

Related News