/* */

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Voter Electoral Roll -ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியலினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார்.

Voter Electoral Roll -ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஹெச். கிருஷ்ணனுண்ணி 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 01.01.2023-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்க திருத்தம் 2023-ஐ இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்ட மன்றத் தொகுதிகளில் உள்ள 2222 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 951 வாக்கு சாவடி அமைவிடங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் அனைத்து வேலை நாட்களில் வருகிற 8.12.22-ந் தேதி வரை பொதுமக்களிடமிருந்து படிவங்கள் பெறும் பணியினை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து தகுதியான வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணி களை இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி 56 சதவீதம் முடிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்களில் 110642 ஆண் வாக்காளர்களும், 115827 பெண் வாக்காளர்களும், 22 இதர வாக்காளர் களும், 22 இராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 226513 வாக்காளர்களும் உள்ளனர்.

ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 101 இடங்களில் 302 வாக்குச்சாவடி மையங்களில் 144821 ஆண் வாக்காளர்களும், 151166 பெண் வாக்காளர்களும், 39 இதர வாக்காளர்களும், 42 இராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 296068 வாக்காளர்களும் உள்ளனர்.

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 147 இடங்களில் 277 வாக்குச்சாவடி மையங்களில் 109721 ஆண் வாக்காளர்களும், 119206 பெண் வாக்காளர்களும், 15 இதர வாக்காளர்களும், 31 இராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 228973 வாக்காளர்களும் உள்ளனர்.

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 153 இடங்களில் 264 வாக்குச்சாவடி மையங்களில் 110506 ஆண் வாக்காளர்களும், 117519 பெண் வாக்காளர்களும், 07 இதர வாக்காளர்களும், 18 இராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 228050 வாக்காளர்களும் உள்ளனர்.

பவானி சட்டமன்ற தொகுதியில் 122 இடங்களில் 289 வாக்குச்சாவடி மையங்களில் 117478 ஆண் வாக்காளர்களும், 121849 பெண் வாக்காளர்களும், 12 இதர வாக்காளர்களும், 59 இராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 239398 வாக்காளர்களும் உள்ளனர்.

அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 122 இடங்களில் 261 வாக்குச்சாவடி மையங்களில் 105964 ஆண் வாக்காளர்களும், 109242 பெண் வாக்காளர்களும், 16 இதர வாக்காளர்களும், 61 இராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 215283 வாக்காளர்களும் உள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 127 இடங்களில் 296 வாக்குச்சாவடி மையங்களில் 121356 ஆண் வாக்காளர்களும், 131736 பெண் வாக்காளர்களும், 08 இதர வாக்காளர்களும், 25 இராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 253125 வாக்காளர்களும் உள்ளனர்.

பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 127 இடங்களில் 295 வாக்குச் சாவடி மையங்களில் 126084 ஆண் வாக்காளர்களும், 132324 பெண் வாக்காளர்களும், 20 இதர வாக்காளர்களும், 18 இராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 258446 வாக்காளர்களும் என ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொத்தம் 8 சட்டமன்ற தொகுதியில் 951 இடங்களில் 2222 வாக்குச்சாவடி மையங்களில் 946572 ஆண் வாக்காளர்களும், 998869 பெண் வாக்காளர்களும், 139 இதர வாக்காளர்களும், 276 இராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 19,45,856 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா, பயிற்சி ஆட்சியர் என்.பொன் மணி, வருவாய் கோட்டாட்சியர்கள் (ஈரோடு) சதீஷ்குமார், (கோபி) திவ்யபிரியதர்ஷினி, வட்டாட்சியர் (தேர்தல்) சிவகாமி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 7:22 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...