/* */

ஈரோடு மாவட்டம் அத்தாணி, கீழ்வாணி , கொளப்பலூர் பகுதிகளில் நாளை மின்தடை

Power Cut News Today -ஈரோடு மாவட்டம் அத்தாணி, கொளப்பலூர் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் அத்தாணி, கீழ்வாணி , கொளப்பலூர் பகுதிகளில் நாளை மின்தடை
X

அத்தாணி துணை மின் நிலையம் பைல் படம்.

Power Cut News Today -அத்தாணி, கொளப்பலூர் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மின் நிலையங்களில் பழுதுகள் இல்லாமல், முறையாகவும் சீராகவும் மின்சாரம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கு வசதியாக மாதந்தோறும் முறையாக முன்னறிவிப்பு செய்து பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. மேலும் இந்த பணிகளை மேற்கொள்ளும் போது மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். இந்நிலையில் மின்தடை நேரமானது குறைந்த பட்சம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும். மேலும் அதிகபட்சமாக காலை 9 மணி முதல் 5 மணி வரை இருக்கும்.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம் அத்தாணி மற்றும் கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (நவம்பர் 9-ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் அப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தாணி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை)

மின்தடை பகுதிகள் :நகலூர், பெருமாபாளையம், கீழ்வாணி, இந்திரா நகர், டி.ஆர்.காலனி, மூங்கில்பட்டி, அத்தாணி, சவுண்டபூர், ஏ.சி. காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், குப்பாண்டம்பாளையம், செம்புளிச்சாம்பாளையம், பெருமாள் கோயில் புதூர் மற்றும் அந்தியூர் நகர குடிநீர் வினியோகம் செய்யும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கோபி மின்சார வாரிய செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

கொளப்பலூர் தூணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)

மின்தடை பகுதிகள்:யூனிட்டி நகர், காமராஜ் நகர், செட்டியம்பாளையம், மல் லநாயக்கனூர், அங்கம்பாளையம், சாணார்பாளையம், லிங்கப்ப கவுண்டன் புதூர், போக்குவரத்து நகர், குமரன் காலனி, அம்மன் கோயில் பதி, கொளப்பலூர், அயலூர், தாழ்குனி மற்றும் சொக்குமாரிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரிய செயற்பொறியாளர் பாபு தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Nov 2022 5:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  3. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  5. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  6. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  8. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  10. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?