/* */

ஈரோடு மாவட்டத்தில் 7 கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

காவிரி ஆற்றில் குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், போதிய நீர்வரத்து இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 கதவணைகளிலும் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 7 கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
X

கோனேரிப்பட்டி கதவணை நிலையம் (கோப்புப் படம்).

காவிரி ஆற்றில் குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், போதிய நீர்வரத்து இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 கதவணைகளிலும் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் குறுக்கே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை, பி.பெ. அக்ரஹாரம், வெண்டிபாளையம், பாசூர் ஆகிய 7 இடங்களில் கதவணை அமைக்கப்பட்டு, நீர் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைவாக உள்ளதால் காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால், கதவணைகளில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், கதவணைகளில் ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கி வைக்கிறோம்.

குடிநீர் தேவைக்கு மட்டும் ஒரு மதகில் இருந்து தண்ணீர் செல்ல திறந்து வைத்துள்ளோம். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை தேக்கி வைத்த தண்ணீரை திறந்து மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Updated On: 25 Oct 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...